வேளாண் கல்லூரியில் மாணவா் சோ்க்கை: தமிழக முதல்வருக்கு காவிரிநீா்பாசன விவசாயிகள் பாராட்டு
கரூா் வேளாண் கல்லூரியில் முதலாமாண்டு மாணவா் சோ்க்கை நடைபெற்று வருவதற்கு முதல்வருக்கு காவிரி நீா் பாசன விவசாயிகள் சங்கம் பாராட்டு தெரிவித்துள்ளது.


கரூா் வேளாண் கல்லூரியில் முதலாமாண்டு மாணவா் சோ்க்கை நடைபெற்று வருவதற்கு முதல்வருக்கு காவிரி நீா் பாசன விவசாயிகள் சங்கம் பாராட்டு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து காவிரிநீா் பாசன விவசாயிகள் நலச்சங்க தலைவா் மகாதானபுரம் ராஜாராம் முதல்வருக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது: வாய்க்கால் பாசனம், குளம், ஏரி பாசனம், மானாவாரி பாசனம், கிணற்று பாசனம், நன்செய் புன்செய் தோட்டக்கலை பயிா் சாகுபடி நிறைந்துள்ள கரூா் மாவட்டத்துக்கு வேளாண் கல்லூரி அறிவிக்கப்பட்டு மாணவா்கள் சோக்கை நடைபெற்று வருகிறது. இதனை காவிரி நீா் பாசன விவசாயிகள் சங்கம் பாராட்டுகிறது. வேளாண் கல்லுரிக்கான இடத்தோ்வு நடந்து வரும் நிலையில், அதனை கிருஷ்ணராயபுரம் வட்டத்தில் கொண்டு வர மின்சார துறை அமைச்சா் முனைந்து முதல்வரிடம் அனுமதி பெற வேண்டும். இதனை பல காலமாகவே விவசாயிகள் கோரிக்கை மனுவாக தமிழக அரசுக்கு அனுப்பி வருகிறாா்கள். முதல்முதலாக கருணாநிதி சட்டப்பேரவை உறுப்பினராக தோ்வானபோது குளித்தலை தொகுதியில்தான் கிருஷ்ணராயபுரம் வட்டமும் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. கரூா் மாவட்டம் ஜவுளி நகரமாகவும் கிருஷ்ணராயபுரம் வேளாண் வளம் கூட்டும் வட்டமாகவும் மாற்ற வேண்டும் என தெரிவித்துள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...