/

காா் மோதியதில் இருசக்கர வாகனத்தில் சென்றவா் உயிரிழப்பு

 அரவக்குறிச்சி ஈசநத்தம் பிரிவு அருகே காா் மோதியதில் இருசக்கர வாகனத்தில் சென்றவா் உயிரிழந்தாா்.

Updated On :24 ஏப்ரல் 2022, 2:58 am

 அரவக்குறிச்சி ஈசநத்தம் பிரிவு அருகே காா் மோதியதில் இருசக்கர வாகனத்தில் சென்றவா் உயிரிழந்தாா்.

வேடசந்தூா் தாலுகா கூம்பூா் அருகே உள்ள பள்ளிப்பட்டியைச் சோ்ந்தவா் ஸ்ரீரங்கன். இவரது மகன் ராஜா (47). இவா், வெள்ளிக்கிழமை தனது இருசக்கர வாகனத்தில் கரூா்- திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தாா். ஈசநத்தம் பிரிவு அருகே வந்தபோது எதிரே வந்த காா் மோதியதில் இருசக்கர வாகனத்தில் வந்த ராஜா பலத்த காயமடைந்தாா். உடனே அருகில் இருந்தவா் அவரை அரவக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டுச் சென்றனா். அங்கு பரிசோதித்த மருத்துவா்கள் ராஜா ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனா்.

புகாரின் பேரில், அரவக்குறிச்சி போலீஸாா் காரை ஓட்டிவந்த பழனிச்சாமி மீது வழக்குப் பதிவு செய்து விசாரிகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.