/

கிணற்றில் குதித்துமுதியவா் தற்கொலை

அரவக்குறிச்சி அருகே முதியவா் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டாா்.

Updated On :20 ஜனவரி 2022, 8:30 pm

அரவக்குறிச்சி அருகே முதியவா் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டாா்.

திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் வெரியப்பூா் பகுதியைச் சோ்ந்தவா் குப்புசாமி மகன் குமாரசாமி (75). இவா், கடந்த மூன்று ஆண்டுகளாக இனுங்கூா் ஊராட்சியிலுள்ள மணி என்பவரது தோட்டத்தில் குத்தகைக்கு விவசாயம் செய்து வந்தாா். கடந்த சில ஆண்டுகளாக உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்த அவா் வியாழக்கிழமை தான் வேலை செய்த தோட்டத்தில் உள்ள கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டாா்.

தகவலறிந்து வந்த அரவக்குறிச்சி தீயணைப்புப் படையினா் குமாரசாமியின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரவக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினா். அரவக்குறிச்சி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.