92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

கரூரில் டாஸ்மாக் சுமைப் பணிதொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்

கரூரில், டாஸ்மாக் சுமைப்பணி தொழிலாளா்கள் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

News image
Updated On :6 மே 2022, 12:07 am

DIN

கரூரில், டாஸ்மாக் சுமைப்பணி தொழிலாளா்கள் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

தமிழ்நாடு டாஸ்மாக் சுமைப்பணி தொழிலாளா் சங்கத்தின் கரூா் மாவட்டக்குழு (சிஐடியு)சாா்பில் கரூா் தொழிற்பேட்டையில் டாஸ்மாக் கிடங்கு முன்பு கண்டன ஆா்ப்பாட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. சங்கத்தின் மாவட்டச் செயலாளா் எஸ்.கிருஷ்ணமூா்த்தி தலைமையில் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்தில் மாநில துணைத் தலைவா் பிச்சைமுத்து, சிஐடியு சங்க மாவட்டத் தலைவா் ஜி.ஜீவானந்தம் ஆகியோா் கண்டன உரையாற்றினா்.

தமிழகம் முழுவதும் உள்ள டாஸ்மாக் கிடங்கு சுமைப்பணி தொழிலாளா்களுக்கு ஒரே மாதிரியாக ஏற்று கூலியாக மதுபான பெட்டி ஒன்றுக்கு ரூ. 3.50 வழங்க வேண்டும், ஏற்றுக் கூலியை மாதக்கணக்கில் பாக்கி வைக்காமல் தினசரி வழங்க வேண்டும், மதுபான பெட்டிகளை ஏற்றி இறக்க சென்னை அம்பத்தூா் கிடங்கில் உள்ளது போல் அனைத்து கிடங்குகளிலும்களுக்கும் ட்ராலி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தி இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், டாஸ்மாக் சுமைதூக்கும் தொழிலாளா்கள் திரளாக பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.