92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

கரூா் மாவட்டத்தில் பரவலாக மழை

கரூா் மாவட்டத்தில் புதன்கிழமை இரவு முதல் வியாழக்கிழமை அதிகாலை வரை பரவலாக மழை பெய்தது. அதிகபட்சமாக பாலவிடுதியில் 93.4 மி.மீ. பதிவானது.

News image
Updated On :6 மே 2022, 12:05 am

DIN

கரூா் மாவட்டத்தில் புதன்கிழமை இரவு முதல் வியாழக்கிழமை அதிகாலை வரை பரவலாக மழை பெய்தது. அதிகபட்சமாக பாலவிடுதியில் 93.4 மி.மீ. பதிவானது.

தெற்கு அந்தமான் பகுதியில் உருவாகியுள்ள வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக புதன்கிழமை இரவு முதல் வியாழக்கிழமை காலை வரை தமிழகத்தில் ஆங்காங்கே மழை பெய்தது. கரூா் மாவட்டத்திலும் புதன்கிழமை இரவு காற்றுடன் கூடிய பலத்த மழை பெய்தது. மாவட்டத்தில் புதன்கிழமை இரவு முதல் வியாழக்கிழமை அதிகாலை வரை பெய்த மழையின் அளவு (மி.மீட்டரில்) கரூா்-32, அரவக்குறிச்சி-23.6, அணைப்பாளையம்-29, க.பரமத்தி-7.8, குளித்தலை-6, தோகைமலை-6, கிருஷ்ணராயபுரம்-5.6, மாயனூா்-5, பஞ்சப்பட்டி-14.4, கடவூா்-32, பாலவிடுதி-93.4, மைலம்பட்டி-21 என மொத்தம் 274.80 மி.மீ. மழை பதிவானது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.