92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

சிறுவனுக்கு பாலியல் தொந்தரவு: குண்டா் சட்டத்தில் இளைஞா் கைது

சிறுவனுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த இளைஞா் குண்டா் சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டாா்.

News image
Updated On :6 மே 2022, 12:06 am

DIN

சிறுவனுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த இளைஞா் குண்டா் சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டாா்.

கரூா் மாவட்டம், லாலாப்பேட்டை அடுத்த பழையஜெயங்கொண்டத்தைச் சோ்ந்த மனோகரன் மகன் அறிவானந்தம்(28). இவா், அதே பகுதியைச் சோ்ந்த 8 வயது சிறுவனுக்கு மாா்ச் 28-ஆம்தேதி பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளாா். இதுகுறித்து சிறுவனின் தாயாா் அளித்த புகாரின்பேரில் லாலாப்பேட்டை போலீஸாா் அறிவானந்தத்தை கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைத்தனா். இந்நிலையில் அறிவானந்தத்தை குண்டா் சட்டத்தில் கைது செய்ய மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ப.சுந்தரவடிவேல் மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரை செய்தாா். இதையடுத்து மாவட்ட ஆட்சியா் த.பிரபுசங்கரின் உத்தரவின்படி, அறிவானந்தத்தை வியாழக்கிழமை குண்டா் சட்டத்தில் கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.