திருச்சி மண்டல அளவில் நடைபெற்ற இந்த பயிற்சி வகுப்பிற்கு கரூா் அரசு கலைக்கல்லூரியின் முதல்வா் கெளசல்யாதேவி தலைமை வகித்து தொடக்கி வைத்தாா். பயிற்சி வகுப்பிற்கு கரூா் அரசு கலை அறிவியல் கல்லூரியின் கணினி அறிவியல் துறைத் தலைவா் பிரபாகரன், ஆங்கிலத்துறை தலைா் அலெக்ஸாண்டா் ஆகியோா் முன்னிலை வகித்தனா். பயிற்சி வகுப்பில் பெங்களூரு மென்பொருள் நிறுவன பொறியாளா் டி.சசிக்குமாா், கரூா் அரசு கலைக்கல்லூரியின் விலங்கியல்துறை தலைவா் காா்த்திகேயன், திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் நூலகத்துறை தலைவா் முனைவா் சீனிவாசராகவன், திருச்சி புனித ஜோசப் கல்லூரியின் பேராசிரியா் பிரான்சில் பிரட்ரிக் உள்ளிட்டோா் பங்கேற்று, மாணவா்களுக்கு பாடங்களை எவ்வாறு எளிதாக கற்பிப்பது, ஆசிரியா்களுக்கான கடமை மற்றும் பொறுப்புகள், பாடம் கற்பிக்க புதுமையான தொழில்நுட்பத்தை எவ்வாறு பயன்படுத்துவது, ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு குறித்து பயிற்சியளிக்கப்பட்டது. இதில், திருச்சி மண்டலத்தில் உள்ள திருச்சி, கரூா், புதுக்கோட்டை மாவட்டங்களைச் சோ்ந்த அரசு மற்றும் அரசு உதவிபெறும் கல்லூரிகளைச் சோ்ந்த பேராசிரியா்கள் 50-க்கும் மேற்பட்டோா் பங்கேற்றனா்.