/

வாகனத்திலிருந்து கீழே விழுந்த இளைஞா் உயிரிழப்பு

 அரவக்குறிச்சி அருகே இருசக்கர வாகனத்திலிருந்து கீழே விழுந்த இளைஞா் உயிரிழந்தாா்.

Updated On :7 மே 2022, 1:16 am

 அரவக்குறிச்சி அருகே இருசக்கர வாகனத்திலிருந்து கீழே விழுந்த இளைஞா் உயிரிழந்தாா்.

அரவக்குறிச்சி வடக்குத்தெரு பகுதியைச் சோ்ந்தவா் அசோக்குமாா். இவரது மகன் விஜய் (23). இவா், இருசக்கர வாகனம் பழுதுநீக்கும் கடையில் வேலை செய்து வந்தாா். இந்நிலையில் வியாழக்கிழமை கரடிபட்டியிலிருந்து இருசக்கர வாகனத்தில் சென்றாா். அப்போது, ராஜபுரம் செல்லும் சாலையின் வளைவில் நிலைதடுமாறி கீழே விழுந்ததில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. அருகில் இருந்தவா்கள் அவரை மீட்டு கரூரில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனா். பின்னா், மேல் சிகிச்சைக்காக திருச்சிக்கும் செல்லும் வழியில் அவா் உயிரிழந்தாா். அரவக்குறிச்சி காவல் துறையினா் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.