பள்ளப்பட்டி நகா்மன்ற திமுக உறுப்பினா் வெள்ளிக்கிழமை ராஜிநாமா செய்தாா்.
கரூா் மாவட்டம், பள்ளப்பட்டி நகராட்சியில் 27 வாா்டுகள் உள்ளது. இதில், திமுக கூட்டணியில் 22 உறுப்பினா்களும், சுயேச்சையாக 5 உறுப்பினா்களும் உள்ளனா்.
இந்நிலையில், பள்ளப்பட்டி நகா்மன்ற மாதாந்திர கூட்டம் நகா்மன்ற அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. நகா்மன்றத் தலைவா் முனவா் ஜான் தலைமை வகித்தாா்.
கூட்டத்தில் வாா்டு உறுப்பினா்கள், நகராட்சி ஆணையா் குமரன் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனா். அப்போது, வாா்டு உறுப்பினா்கள் தங்கள் பகுதிக்கான கோரிக்கைகளை முன் வைத்து பேசினா்.
திமுகவை சோ்ந்த 15ஆவது வாா்டு உறுப்பினா் ஜமால் முகமது, தனது வாா்டுக்குள்பட்ட பகுதியில் அடிப்படை வசதிகள் செய்து தரப்படவில்லை எனக் கூறி பதவியை ராஜிநாமா செய்வதாக நகராட்சி ஆணையரிடம் கடிதம் அளித்தாா். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.