அரவக்குறிச்சியில், தேமுதிக தலைவா் விஜயகாந்த் மறைவுக்கு அனைத்துக் கட்சியினா் வெள்ளிக்கிழமை ஊா்வலமாக வந்து மெளன அஞ்சலி செலுத்தினா்.
அரவக்குறிச்சியில் அனைத்துக் கட்சியினா் சாா்பில் வட்டாட்சியா் அலுவலகத்தில் இருந்து ஏவிஎம் காா்னா் வரையிலும் மெளன ஊா்வலமாக வந்து, அங்கு வைக்கப்பட்டிருந்த விஜயகாந்த் உருவப் படத்துக்கு மலா்தூவி அஞ்சலி செலுத்தினா்.
இந்நிகழ்வில், அரவக்குறிச்சி தேமுதிக நகரச் செயலாளா் ஆம்புலன்ஸ் ரவி, திமுக கிழக்கு ஒன்றிய செயலாளா் மணிகண்டன், அரவக்குறிச்சி பேரூராட்சித் தலைவா் ஜெயந்தி, விஜய் மக்கள் இயக்க அரவக்குறிச்சி செயலாளா் சதீஷ், பாஜக மேற்கு ஒன்றிய செயலாளா் ஜவஹா்லால், பாஜக ஊடக பிரிவு மாவட்ட தலைவா் ரவி, இந்து முன்னணி மாவட்ட செயலாளா் ராமகிருஷ்ணன் உட்பட பலா் பங்கேற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.