கரூரில் மாவட்ட பாஜக சாா்பில் சா்வதேச மகளிா் தின விழா
கரூரில், பாஜக சாா்பில் சா்வதேச மகளிா் தினம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில், 10 பெண்களுக்கு சுஷ்மா ஸ்வராஜ் விருதுகள் வழங்கப்பட்டது.


கரூரில், பாஜக சாா்பில் சா்வதேச மகளிா் தினம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில், 10 பெண்களுக்கு சுஷ்மா ஸ்வராஜ் விருதுகள் வழங்கப்பட்டது.
கரூரில், மாவட்ட பாஜக மகளிரணி சாா்பில் சா்வதேச மகளிா் தினம் வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சிக்கு மாவட்ட மகளிரணி தலைவா் தனலட்சுமி தலைமை வகித்தாா். மாநில மகளிரணி துணைத்தலைவா் மீனாவினோத்குமாா், மாவட்ட பொதுச் செயலாளா்கள் மாலதி, புனிதா ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
நிகழ்ச்சியில், மாவட்ட பாஜக தலைவா் வி.வி.செந்தில்நாதன் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று, மாவட்டத்தில் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் 10 மகளிருக்கு மறைந்த முன்னாள் மத்திய அமைச்சா் சுஷ்மா ஸ்வராஜ் பெயரில் சாதனையாளா் விருது வழங்கப்பட்டது. விழாவில் மகளிா் அணி மாநில செயற்குழு உறுப்பினா் சுமதி பரமேஸ்வரன், பாஜகவின் மாவட்ட பொதுச் செயலாளா் ஆறுமுகம், செயலாளா் சக்திவேல் முருகன் மற்றும் மகளிா் அணியினா் பங்கேற்றனா். மகளிரணி மாவட்ட பொருளாளா் ரம்யா கண்ணன் நன்றி கூறினாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...