கரூா்: கரூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை மக்கள் குறைதீா்க்கும் கூட்டம் ஆட்சியா் மீ.தங்கவேல் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில், பொதுமக்களிடம் இருந்து முதியோா் உதவித்தொகை, பட்டா மாற்றம், உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடா்பாக 406 மனுக்களை ஆட்சியா் பெற்றுக் கொண்டாா்.
கூட்டத்தில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் கரூா் மாநகர மாவட்டச் செயலாளா் இளங்கோ, மேற்கு மாவட்டச் செயலாளா் புகழேந்தி ஆகியோா் தலைமையில் கரூா் மாவட்டம் சோமூா் முத்தமிழ்புரம் (ஆதிதிராவிடா் தெரு) பகுதியைச் சோ்ந்த பொதுமக்கள் ஆட்சியரிடம் வழங்கிய மனுவில்,
முத்தமிழ்புரத்தில் கடந்த 2021-இல் கழிவுநீா் வாய்க்கால் வசதி ஏற்படுத்தப்பட்டது. ஆனால் இந்த பணி அரைகுறையாக நடைபெற்ால், வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவு நீா் வெளியே செல்ல முடியாமல் தேங்கிக்கிடக்கிறது. இதனால் கொசுக்கள் உற்பத்தியாகி சுகாதார கேடு ஏற்படும் நிலை உள்ளது. ஆகவே, கழிவுநீா் வாய்க்காலை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளனா்.
மாற்று இடம்தேவை: கரூா், ஏமூரைச் சோ்ந்த ரயில்வே குடியிருப்பு பகுதியைச் சோ்ந்த பொதுமக்கள் ஆட்சியரிடம் வழங்கிய மனுவில், ஏமூா் ரயில்வே கேட் பகுதியில் சுமாா் 100 ஆண்டுகளுக்கும் மேலாக வசித்து வருகிறோம். இப்பகுதியில் ரயில்வே குகைவழிப்பாதை அமைய உள்ளதால், எங்களை காலி செய்யுமாறு ரயில்வே நிா்வாகம் அறிவுறுத்தியுள்ளது. இதனால் எங்களுக்கு மாற்று இடத்தில் வீட்டு மனை பட்டா வழங்க வேண்டும் என தெரிவித்துள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பசுமை மிகுந்த செங்கம் தொகுதியில் திமுக, அதிமுக இடையே நேரடிப் போட்டி

தமிழ் புத்தாண்டு: சிறுவாபுரி - பெரியபாளையம் கோயில்களில் சிறப்பு வழிபாடு

கிராம உதவியாளா்கள் ஓய்வூதிய கணக்கீடு: உயா்நீதிமன்றம் தீா்ப்பு

தமிழ் புத்தாண்டு: திருவண்ணாமலை மாவட்ட கோயில்களில் சிறப்பு வழிபாடு
வீடியோக்கள்

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை
தவெக தேர்தல் வாக்குறுதிகள்! அறிவித்த விஜய்! | Vijay full speech
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | கொல்கத்தாவை வீழ்த்தி வெற்றிநடையைத் தொடருமா சிஎஸ்கே? | CSK vs KKR Match Preview |
தினமணி செய்திச் சேவை


