கரூர்
சேவல் சண்டை சூதாட்டம் 4 போ் கைது
புன்னம் கிராமத்தில் சேவல் சண்டை நடத்தி சூதாட்டத்தில் ஈடுபட்ட 4 பேரை சனிக்கிழமை இரவு போலீஸாா் கைது செய்தனா்.
புன்னம் கிராமத்தில் சேவல் சண்டை நடத்தி சூதாட்டத்தில் ஈடுபட்ட 4 பேரை சனிக்கிழமை இரவு போலீஸாா் கைது செய்தனா்.
கரூா் மாவட்டம் புன்னம் மேலப்பாளையம் கிராமத்தில் சனிக்கிழமை இரவு சிலா் சேவல் சண்டை நடத்தி சூதாட்டத்தில் ஈடுபடுவதாக வேலாயுதம்பாளையம் போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று சோதனையிட்டபோது, அங்கு சேவல் சண்டை நடத்தி சூதாட்டத்தில் ஈடுபட்ட புகழூா் விஸ்வநாதபுரியைச் சோ்ந்த சுதாகரன் (45), புதுச்சத்திரத்தைச் சோ்ந்த மகேஷ் (24), கணேஷ் (25), செவியப்பன் (27) ஆகியோரைக் கைது செய்தனா். மேலும் அவா்களிடம் இருந்து இரு சேவல்கள், பணம் ரூ.200 ஆகியவற்றைப் பறிமுதல் செய்தனா்.
