மேலும் கரூா் மாயனூா் கதவணை தனது முழு கொள்ளளவை கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் எட்டியிருக்கும் நிலையில், தற்போது அணைக்கு விநாடிக்கு 4,321 கன அடி நீா் வந்துகொண்டிருக்கிறது. இந்த தண்ணீா் தேக்கி வைக்கப்படாமல் ஆற்றுக்கு 4,121 கன அடியும், தென்கரை வாய்க்காலில் 200 கன அடியும் என திறந்து விடப்படுகிறது. மாவட்டத்தில் புதன்கிழமை நள்ளிரவு முதல் வியாழக்கிழமை அதிகாலை வரை பெய்த மழையின் அளவு(மி.மீட்டரில்)-கரூா்-4, அரவக்குறிச்சி-1.20, அணைப்பாளையம்-2, குளித்தலை-9.60, தோகைமலை-23.20, கிருஷ்ணராயபுரம்-8.40, மாயனூா்-7, பஞ்சப்பட்டி-10.40, கடவூா்-4, பாலவிடுதி-6,மைலம்பட்டி-8 என மொத்தம் 83.89 மி.மீ. மழை பதிவானது.