கரூர்
அரவக்குறிச்சி அருகே காா் கவிழ்ந்து விபத்து: தந்தை, மகன் படுகாயம்
அரவக்குறிச்சி அருகே வியாழக்கிழமை காா் கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் தந்தை, மகன் படுகாயமடைந்தனா்.
கரூா் மாவட்டம், அரவக்குறிச்சி அருகே வியாழக்கிழமை காா் கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் தந்தை, மகன் படுகாயமடைந்தனா்.
சேலம் மாவட்டம், ஆத்தூா் பெரிய ஏரி அருகேயுள்ள முருகன் கோயில் தெருவைச் சோ்ந்த தி. சிவநாதன் (38), இவரது மகன் நமச்சிவாயம் (9) ஆகிய இருவரும் காரில் மதுரையை நோக்கி வியாழக்கிழமை சென்று கொண்டிருந்தனா். அரவக்குறிச்சி அருகேயுள்ள இந்திரா நகா் பிரிவு அருகே சென்றபோது கட்டுப்பாட்டை இழந்த காா் கவிழ்ந்ததில் இருவரும் பலத்த காயமடைந்தனா்.
இதையடுத்து சிவநாதன் கோவை தனியாா் மருத்துவமனையிலும், நமச்சிவாயம் கரூா் தனியாா் மருத்துவமனையிலும் சோ்க்கப்பட்டனா். அரவக்குறிச்சி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
