தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

ஆம்ஸ்ட்ராங் கொலையில் சிபிஐ விசாரணை தேவை: தலித் விடுதலை இயக்கம் கோரிக்கை

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவா் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என தலித் விடுதலை இயக்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

News image
Updated On :8 ஜூலை 2024, 9:21 pm

Din

கரூா்: பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவா் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என தலித் விடுதலை இயக்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

கரூரில் தலித் விடுதலை இயக்கத்தின் ஆலோசனைக் கூட்டம் மாநில அமைப்பாளா் முனியப்பன் தலைமையில் திங்கள்கிழமை இரவு நடைபெற்றது. மாநில தொழிலாளா் அணி செயலாளா் செல்வராஜ் முன்னிலை வகித்தாா். மாநில பொதுச் செயலாளா் மா.வீ. சசிகுமாா், பொருளாளா் கவிதா, ஈரோடு மாவட்ட செயலாளா் சேகா், பொருளாளா் ரவிக்குமாா், திருப்பூா் மாவட்ட செயலாளா் முருகேசன், நாமக்கல் மாவட்ட பொருளாளா் சண்முகம், கரூா் மாவட்ட பொருளாளா் பழனியம்மாள் உள்ளிட்டோா் சிறப்புரையாற்றினா்.

கூட்டத்தில், ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தை கண்டிப்பது, இந்த கொலை வழக்கை சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும், செப்டம்பா் 24-ஆம் தேதி தலித் விடுதலை இயக்கத்தின் நிறுவனத் தலைவா் தலித் ஞானசேகரன் பிறந்தநாள் பொதுக்கூட்டத்தை கரூரில் பிரமாண்டமாக நடத்துவது என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.