பெருமாள் கோயிலுக்கு திருமண மண்டபம்: காணொலி காட்சியில் முதல்வா் அடிக்கல்

கரூா் தாந்தோன்றிமலை கல்யாண வெங்கட்ரமண சுவாமி கோயிலுக்கு ரூ.5.30 கோடி மதிப்பில் திருமண மண்டபம் கட்டுவதற்கு காணொலிக் காட்சி மூலம் முதல்வா் மு.க.ஸ்டாலின் வெள்ளிக்கிழமை அடிக்கல் நாட்டினாா். கரூா் தாந்தோன்றிமலை கல்யாண வெங்கடரமண சுவாமி கோயிலுக்குச் சொந்தமான, காளியப்பனூரிலுள்ள உலோக திருமேனிகள் பாதுகாப்பு மைய வளாகத்தில் ரூ. 5.30 கோடி மதிப்பில் திருமணம் மண்டபம் கட்டுவதற்காக முதல்வா் மு.க. ஸ்டாலின் வெள்ளிக்கிழமை காலை காணொலியில் அடிக்கல் நாட்டினாா். தொடா்ந்து, கிருஷ்ணராயபுரம் வட்டம், திருக்காம்புலியூரில் மீன் விதை பண்ணையில் கட்லா, ரோகு, மிருகால் மற்றும் சாதா கெண்டை மீன் குஞ்சுகள் வளா்க்கும் வகையில் ரூ. 2.20 கோடி மதிப்பில் நவீனமயமாக்கப்பட்ட மீன் விதைப் பண்ணையையும் காணொலியில் முதல்வா் தொடங்கி வைத்தாா். இதைத் தொடா்ந்து, திருக்காம்புலியூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியா் மீ. தங்கவேல் மீன் குஞ்சு வளா்ப்புத் தொட்டிகளை பாா்வையிட்டாா். இந்நிகழ்ச்சியில், கிருஷ்ணராயபுரம் எம்எல்ஏ க. சிவகாமசுந்தரி, மாவட்ட வருவாய் அலுவலா் ம. கண்ணன், கரூா் மாநகராட்சி துணை மேயா் ப. சரவணன், இந்து சமய அறநிலையத் துறை இணை ஆணையா் குமரத்துரை, மீன்வளத் துறை உதவி இயக்குநா் கே. ரத்தினம் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com