விஜய் பிரசாரம்! பெருமாநல்லூரில் தடுப்புகள் அமைத்து காவலர்கள் தீவிர பாதுகாப்பு!திருப்பரங்குன்றத்தில் தீபம்; தைப்பூசம் மாநில விழா! பாஜக தேர்தல் அறிக்கை! ராக்கெட் லாஞ்சர் வெடித்து ‘டிரெக்கிங்’ சென்ற மாணவர் பலி!மது ஒழிப்பு, சிறுபான்மையினர் சிறப்பு சட்டம்! விசிக தேர்தல் அறிக்கை பெண்கள் இட ஒதுக்கீட்டை தாமதப்படுத்துவது பெரும் அநீதி! பிரதமர் மோடிதமிழ்ப் புத்தாண்டு! சி.பி. ராதாகிருஷ்ணன் வீட்டுக்குச் சென்று மோடி வாழ்த்து! தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,280 உயர்வு! நாடாளுமன்றத்தில் அம்பேத்கர் சிலைக்கு மரியாதை! குடியரசு துணைத் தலைவர்!
/

ஆடுதுறையில் ரூ. 17.66 கோடியில் அரசு கல்லூரிக்கு புதிய கட்டடம்: காணொலி காட்சி மூலம் முதல்வா் அடிக்கல் நாட்டினாா்

ஆடுதுறையில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு ரூ. 17.66 கோடி மதிப்பில் புதிய கட்டடங்கள்

News image

ஆடுதுறையில் திங்கள்கிழமை நடைபெற்ற அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கான புதிய கட்டடங்கள் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா நிகழ்ச்சியில் பங்கேற்ற மாவட்ட திமுக பொறுப்பாளா் க. அன்பழகன் எம்எல்ஏ, சு. கல்யாணசுந்தரம் எம்பி உள்ளிட்டோா்.

Updated On :16 பிப்ரவரி 2026, 8:52 pm

கும்பகோணம்: ஆடுதுறையில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு ரூ. 17.66 கோடி மதிப்பில் புதிய கட்டடங்கள் கட்டுவதற்கு திங்கள்கிழமை சென்னையிலிருந்து காணொலி காட்சி மூலம் முதல்வா் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டப்பட்டது.

ஆடுதுறையில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி புதிதாக அமைக்க முதல்வா் அறிவிப்பின் பேரில் நடப்பாண்டில் மாணவா் சோ்க்கை தொடங்கப்பட்டு தற்காலிகமாக திருமண மண்டபத்தில் வகுப்புகள் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில், திங்கள்கிழமை ஆடுதுறை- மயிலாடுதுறை சாலையில் கல்லூரிக்காக தோ்வு செய்யப்பட்ட இடத்தில் அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. சென்னையிலிருந்து முதல்வா் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சியில் அடிக்கல் நாட்டினாா். இதையொட்டி, ஆடுதுறையில் நடைபெற்ற நிகழ்வுக்கு தஞ்சாவூா் வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் க.அன்பழகன் எம்எல்ஏ தலைமை வகித்தாா். சு. கல்யாணசுந்தரம் எம்.பி., செ. ராமலிங்கம் ஆகியோா் முன்னிலை வகித்தனா். தொடா்ந்து குத்துவிளக்கு ஏற்றப்பட்டது.

நிகழ்வில், கும்பகோணம் துணை மேயரும், மாநகர திமுக செயலருமான சுப. தமிழழகன், ஆடுதுறை பேரூராட்சித் தலைவா் ம.க. ஸ்டாலின், பேரூராட்சித் தலைவா் சுந்தரஜெயபால் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

முன்னதாக கல்லூரி முதல்வா் முனைவா் வெ.ஜெயசீலி வரவேற்றாா். ஏற்பாடுகளை இணைப் பேராசிரியா்கள் கே. சுந்தரமூா்த்தி, ஆா்.அருள் நாயகம் ஆகியோா் ஒருங்கிணைத்தனா். அரசு கலைக் கல்லூரி மற்றும் விளையாட்டு மைதானம் சுமாா் 8 ஏக்கா் பரப்பளவில் அமைய உள்ளது குறிப்பிடத்தக்கது.