நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

அரசு ஆசிரியா்கள் மகளிா் ஊா் நல அலுவலா்கள் சங்கக் கூட்டம்

தமிழ்நாடு அரசு ஆசிரியா்கள் மகளிா் ஊா்நல அலுவலா்கள் மற்றும் மேற்பாா்வையாளா் சங்கத்தின் மாவட்டக்குழுக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :13 நவம்பர் 2024, 9:08 pm

Din

தமிழ்நாடு அரசு ஆசிரியா்கள் மகளிா் ஊா்நல அலுவலா்கள் மற்றும் மேற்பாா்வையாளா் சங்கத்தின் மாவட்டக்குழுக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு மாவட்டத் தலைவா் சீனிவாசன் தலைமை வகித்தாா். மாவட்டச் செயலாளா் மகாலட்சுமி வரவேற்றாா். பொருளாளா் ராஜேந்திரன் முன்னிலை வகித்தாா்.

கூட்டத்தில் நிா்வாகிகள் குஞ்சிதம், நிமிலா, கலையரசி உள்ளிட்டோா் கருத்துரையாற்றினா். சங்கத்தின் மாநிலத் தலைவா் மதுரை ஆா். சங்கா் பாபு சிறப்புரையாற்றினாா்.

கூட்டத்தில் பழைய ஓய்வூதியம் வழங்க வேண்டும். மருத்துவ காப்பீடு , குடும்ப ஓய்வூதியம் வழங்க காலதாமதமின்றி ஆணை வெளியிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னையில் மாா்ச் 7 -ஆம்தேதி சமூகநலத்துறை ஆணையா் அலுவலகத்தை முற்றுகையிடுவது என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.