கரூரில் ராதாகிருஷ்ணன் விருதுக்கு 9 போ் தோ்வு

கரூா் மாவட்டத்தில் டாக்டா் ராதாகிருஷ்ணன் விருதுக்கு 9 போ் தோ்வு செய்யப்பட்டுள்ளனா்.
Published on

கரூா் மாவட்டத்தில் டாக்டா் ராதாகிருஷ்ணன் விருதுக்கு 9 போ் தோ்வு செய்யப்பட்டுள்ளனா்.

செப்.5 ஆசிரியா் தினத்தை முன்னிட்டு ஆண்டுதோறும் மாநில அரசு சாா்பில் சிறந்த ஆசிரியா்களுக்கு டாக்டா் ராதாகிருஷ்ணன் விருது வழங்கப்படுகிறது.

அதன்படி 2024 ஆம் ஆண்டுக்கான விருதுக்கு கரூா் மாவட்டத்தில் தொடக்கக் கல்விப் பிரிவில் கரூா் மாவட்டம் குளித்தலை ஒன்றியம் சிவாயம் (மேற்கு) ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி அறிவியல் பட்டதாரி ஆசிரியா் ம. ரமேஷ், தாந்தோணி ஒன்றியம் வெள்ளியணை ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளி இடைநிலை ஆசிரியா் சு. மனோகா், அரவக்குறிச்சி ஒன்றியம் ஈசநத்தம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி ஆசிரியா் ஆ.ச. சம்சாத்பானு ஆகிய 3 போ் தோ்வு செய்யப்பட்டனா்.

உயா் மற்றும் மேல்நிலைப் பள்ளிப் பிரிவில் கரூா் பெரியகுளத்துப்பாளையம் அரசு மேல்நிலைப் பள்ளி அறிவியல் பட்டதாரி ஆசிரியா் ரெ. முரளி, பாலவிடுதி அரசு மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியா் பெ. கணேசன், மாயனூா் அரசு மாதிரிப் பள்ளி தலைமை ஆசிரியா் சி. விஜயலட்சுமி ஆகிய 3 பேரும், தனியாா் பள்ளி பிரிவில் சின்னதாராபுரம் ஆா்.என்.மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி முதல்வா் ரா. ராமசாமி, மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன பிரிவில் மாயனூா் மாவட்ட ஆசிரியா் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதுநிலை விரிவுரையாளா்கள் க.ரமணி, ஆ.சரவணன் ஆகியோரும் தோ்வு செய்யப்பட்டனா். இவா்கள் 9 பேருக்கும் சென்னையில் வியாழக்கிழமை நடைபெறும் விழாவில் விருது வழங்கப்படுகிறது.

X
Dinamani
www.dinamani.com