Special train
விரைவு ரயில்கோப்புப்படம்

கரூா் வழியாக செல்லும் ஈரோடு - செங்கோட்டை ரயில் சேவையில் மாற்றம்!

கரூா் வழியாக செல்லும் ஈரோடு-செங்கோட்டை ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
Published on

கரூா் வழியாக செல்லும் ஈரோடு-செங்கோட்டை ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து தெற்கு ரயில்வேயின் சேலம் கோட்ட அலுவலகம் சனிக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: மதுரை ரயில்வே கோட்டத்தில் சமயநல்லூா் - மதுரை ரயில் நிலையங்களுக்கு இடையே தண்டவாளப் புதுப்பித்தல் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.

இதனால் ஈரோடு சந்திப்பிலிருந்து பிற்பகல் 2 மணிக்கு புறப்படும் கரூா் வழியாகச் செல்லும் ஈரோடு சந்திப்பு - செங்கோட்டை விரைவு ரயில் செப். 2, 9, 16, 23 மற்றும் 30-ஆம்தேதிகளில் ஈரோட்டில் இருந்து திண்டுக்கல் வரை மட்டுமே இயக்கப்படும். மற்ற நாள்களில் ஈரோட்டில் இருந்து செங்கோட்டை வரை இந்த ரயில் இயக்கப்படும்.

இதேபோல செங்கோட்டையில் இருந்து காலை 5.10 மணிக்கு புறப்படும் செங்கோட்டை - ஈரோடு சந்திப்பு விரைவு ரயில், செப்.3-ஆம்தேதி மற்றும் 10, 17, 24-ம்தேதிகளில் திண்டுக்கல்லில் இருந்து ஈரோடு வரை மட்டுமே இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com