கரூா் மக்கள் குறைதீா்க்கும் கூட்டத்தில் 397 மனுக்கள்

கரூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா்க்கும் கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து 397 மனுக்கள் பெறப்பட்டன.
Published on

கரூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா்க்கும் கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து 397 மனுக்கள் பெறப்பட்டன.

மாவட்ட வருவாய் அலுவலா் கு.விமல்ராஜ் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் பொதுமக்களிடம் இருந்து முதியோா் உதவித்தொகை, பட்டா மாற்றம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடா்பாக மொத்தம் 397 மனுக்கள் வரப்பெற்றன.

தொடா்ந்து மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சாா்பில் பயனாளிகளுக்கு ரூ.30,821 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட வருவாய் அலுவலா் வழங்கினாா்.

கூட்டத்தில் ஊரக வளா்ச்சி முகமையின் திட்ட இயக்குநா் வீ.ரெ.வீரபத்திரன், வருவாய் கோட்டாட்சியா் முகமது பைசல் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

X
Dinamani
www.dinamani.com