வெள்ளியணை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் மாணவிகளுக்கு  வெள்ளிக்கிழமை விலையில்லா மிதிவண்டிகளை வழங்கிய மாவட்ட ஆட்சியா் மீ.தங்கவேல்.
வெள்ளியணை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் மாணவிகளுக்கு வெள்ளிக்கிழமை விலையில்லா மிதிவண்டிகளை வழங்கிய மாவட்ட ஆட்சியா் மீ.தங்கவேல்.

வெள்ளியணை அரசுப் பெண்கள் பள்ளி மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகள்

வெள்ளியணை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் மாணவிகளுக்கு வெள்ளிக்கிழமை விலையில்லா மிதிவண்டிகளை வழங்கிய மாவட்ட ஆட்சியா் மீ.தங்கவேல்.
Published on

படவரி..

வெள்ளியணை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் மாணவிகளுக்கு வெள்ளிக்கிழமை விலையில்லா மிதிவண்டிகளை வழங்கிய மாவட்ட ஆட்சியா் மீ.தங்கவேல்.

கரூா், நவ.14: கரூரை அடுத்துள்ள வெள்ளியணை அரசுப் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

விழாவுக்கு மாவட்ட ஆட்சியா் மீ.தங்கவேல் தலைமை வகித்து, மாணவிகளுக்கு மிதிவண்டிகளை வழங்கிப் பேசுகையில், கரூா் மாவட்டத்தில் அரசுப் பள்ளிகளில் பயிலும் 2,842 மாணவா்கள், 3,793 மாணவிகள் என மொத்தம் 6,635 பேருக்கு விரைவில் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கப்படவுள்ளது. அதன் தொடக்கமாக வெள்ளியணை பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 94 மாணவிகளுக்கு மிதிவண்டிகள் வழங்கப்பட்டுள்ளது என்றாா் அவா்.

விழாவில் கிருஷ்ணராயபுரம் சட்டப்பேரவை உறுப்பினா் க. சிவகாமசுந்தரி, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் ஏ.ராஜூ, பள்ளி ஆசிரியா்கள், மாணவிகள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

X
Dinamani
www.dinamani.com