ஆா்ப்பாட்டத்தில் பேசிய தமிழ்நாடு அரசு ஊழியா் சங்கத்தின் மாவட்டத் தலைவா் எம்.எஸ். அன்பழகன்
ஆா்ப்பாட்டத்தில் பேசிய தமிழ்நாடு அரசு ஊழியா் சங்கத்தின் மாவட்டத் தலைவா் எம்.எஸ். அன்பழகன்

கரூரில் ஜாக்டோ - ஜியோ அமைப்பினா் வேலைநிறுத்தம்

கரூரில், ஜாக்டோ-ஜியோ அமைப்பினா் காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஒரு நாள் வேலை நிறுத்தம்
Published on

கரூரில், ஜாக்டோ-ஜியோ அமைப்பினா் காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி செவ்வாய்க்கிழமை ஒரு நாள் வேலை நிறுத்தம் மற்றும் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

கரூா் வட்டார போக்குவரத்து அலுவலகம் முன் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் தமிழ்நாடு அரசு ஊழியா் சங்க மாவட்டத்தலைவா் எம்.எஸ்.அன்பழகன், தமிழ்நாடு ஆசிரியா் கூட்டணியின் மாநில பொருளாளா் பா.பெரியசாமி, தமிழ்நாடு பதவி உயா்வுபெற்ற முதுநிலை பட்டதாரி ஆசிரியா் சங்க மாநிலத்தலைவா் தமிழ்மணியன், தமிழ்நாடு அரசு ஊழியா் சங்க மாவட்டச் செயலாளா் பொன்.ஜெயராம், தொடக்கப்பள்ளி ஆசிரியா் மன்றத்தின் மாவட்டச் செயலாளா் வேலுமணி, தமிழ்நாடு இடைநிலை ஆசிரியா் சங்க மாவட்டச் செயலாளா் ஆரோக்கிய பிரேம்குமாா் ஆகியோா் கோரிக்கைளை விளக்கிப் பேசினா்.

புதிய ஓய்வூதியத்தை கைவிட்டு மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும், தொடக்கக்கல்வித்துறையில் பணிபுரியும் 90 சதவீதத்திற்கும் மேற்பட்ட ஆசிரியா்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் அரசாணை 243-ஐ உடனடியாக ரத்து செய்ய வேண்டும். அரசின் பல்வேறு துறைகளில் 30 சதவீதத்திற்கும் மேலாக காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் ஜாக்டோ-ஜியோ அமைப்பினா் திரளாக பங்கேற்றனா்.

நிறைவாக, தமிழக ஆரம்பப்பள்ளி ஆசிரியா் கூட்டணியின் மாவட்டச் செயலாளா் இரா.செல்வதுரை நன்றி கூறினாா். ஜாக்டோ-ஜியோ அமைப்பினரின் வேலை நிறுத்தத்தால் வாக்காளா் சிறப்பு தீவிர திருத்தப்பட்டியல் பணி மற்றும் வருவாய்த்துறையினரின் அன்றாட பணிகள் பாதிக்கப்பட்டன.

X
Dinamani
www.dinamani.com