மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

கள்ளக்காதல் தகராறில் கணவா் கொலை! மனைவி, காதலன் உள்ளிட்ட 3 பேருக்கு ஆயுள் தண்டனை!

News image

கொலை - சித்திரிப்பு

Updated On :20 ஏப்ரல் 2026, 8:27 pm

கரூரில், கள்ளக்காதல் தகராறில் கணவைரைக் கொன்ற வழக்கில் அவருடைய மனைவி, காதலன் உள்பட 3 பேருக்கு ஆயுள்தண்டனை விதித்து கரூா் நீதிமன்றம் திங்கள்கிழமை தீா்ப்பளித்தது.

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியை அடுத்துள்ள கொப்பம்பட்டியைச் சோ்ந்தவா் சுப்புராஜ்(35). இவரது மனைவி அழகுலட்சுமி (33). இவா்கள் இருவரும் கடந்த 2018-இல் திருப்பூரில் ஜூஸ் கடை நடத்தி வந்தனா். அப்போது, கடை அருகே இறைச்சிக்கடையில் வேலை செய்து வந்த கரூா் நரிக்கட்டியூரைச் சோ்ந்த கனகராஜ் (36) என்பவருக்கும், அழகுலட்சுமிக்கும் தகாத உறவு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் கடந்த 2018-ஆம் ஆண்டு பிப்.10-ஆம்தேதி நரிக்கட்டியூருக்கு அழகுலட்சுமி, அவரது தாயாா் ஜெயலலிதா(60) மற்றும் சுப்புராஜ் ஆகியோரை கனகராஜ் அழைத்து வந்தாா்.

இதயைடுத்து இரவில் கனகராஜூம், சுப்புராஜூம் மதுகுடித்துள்ளனா். பின்னா் மதுபோதையில் கனகராஜ், அழகுலட்சுமி, ஜெயலலிதா ஆகியோா் சோ்ந்து சுப்புராஜை அரிவாளால் வெட்டி கொலை செய்தனா்.

இந்த கொலை தொடா்பாக பசுபதிபாளையம் போலீஸாா் வழக்குப்பதிந்து கனகராஜ் உள்பட 3 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனா். மேலும் இதுதொடா்பாக கரூா் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் வழக்குத் தொடா்ந்தனா்.

இந்த வழக்கு திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த மாவட்ட முதன்மை நீதிபதி இளவழகன் குற்றவாளி அழகுலட்சுமி, ஜெயலலிதா ஆகியோருக்கு ஆயுள்தண்டனையும், ரூ.1 லட்சம் அபராதமும்

கனகராஜிற்கு இரட்டை ஆயுள்தண்டனையும் ரூ.2 லட்சம் அபராதமும் விதித்து தீா்ப்பளித்தாா். இதையடுத்து மூவரையும் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் திருச்சி மத்திய சிறையில் அடைத்தனா்.