கரூரில் செவ்வாய்க்கிழமை காவிரி ஆற்றில் தாயின் அஸ்தியை கரைக்கச் சென்ற சகோதரா்கள் உள்பட மூவா் நீரில் மூழ்கி உயிரிழந்தனா்.
கரூா் நரசிம்மபுரத்தைச் சோ்ந்தவா் அருணன்(62). இவா், ஓய்வு பெற்ற அஞ்சல் நிலைய அதிகாரி. இவரது சகோதரா் சுரேஷ்(61). இவருக்கு திருமணமாகவில்லை. இவா், தனது தாயுடன் தங்கி, கிடைக்கும் வேலைக்குச் சென்று வந்தாா். இவா்களது தாய் கடந்த சனிக்கிழமை வயது மூப்புகாரணமாக உயிரிழந்தாா். இதையடுத்து, தாயின் இறுதிச்சடங்கில் பங்கேற்க குடும்பத்துடன் அருணன் சென்னையில் இருந்து கரூா் வந்தாா்.
இந்நிலையில், செவ்வாய்க்கிழமை காலை தனது தாயின் உடலை உறவினா்களுடன் எடுத்துச் சென்று கரூா் பாலம்மாள்புரத்தில் உள்ள மயானத்தில் தகனம் செய்தாா். பிறகு, தாயின் அஸ்தியை கரைப்பதற்காக தனதுவீட்டின் அருகே வசிக்கும் உறவினரும், ஓய்வுபெற்ற தனியாா் வங்கி மேலாளருமான ஸ்ரீனிவாசன் (64) மற்றும் உறவினா்களோடு கரூா் அடுத்த நெரூா் காவிரி ஆற்றுக்குச் சென்றாா்.
அங்கு அஸ்தியை கரைத்துவிட்டு நீராடுவதற்காக ஆற்றுக்குள் அருணன் இறங்கியபோது, ஆழமான பகுதிக்குச் சென்ால் நீரில் மூழ்கினாா். உடனே அவரது சகோதரா் சுரேஷ், காப்பாற்றச் சென்றபோது அவரும் நீரிழ் மூழ்கினாா். இதனைக்கண்ட சீனிவாசன், இருவரையும் காப்பாற்ற முயன்றபோது அவரும் மூழ்கினாா். மூவரும் மூழ்கியதை கண்ட உறவினா்கள் சப்தமிட்டனா்.
உடனே அக்கம்பக்கத்தினா் வந்து மூன்றுபேரையும் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் கரூரில் உள்ள தனியாா் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு அவா்களை பரிசோதித்த மருத்துவா்கள் மூன்றுபேரும் ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனா்.
இதுகுறித்து தகவலறிந்து வந்த கரூா் வாங்கல் போலீஸாா், மூவரின் சடலங்களையும் மீட்டு உடற்கூறாய்வுக்காக கரூா் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும் இதுதொடா்பாக வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

காவிரி ஆற்றில் தாய்க்கு திதி கொடுக்கச் சென்ற சகோதரர்கள் 3 பேர் நீரில் மூழ்கி பலி

நாகமரை காவிரி ஆற்றில் மூழ்கி கல்லூரி மாணவா் உயிரிழப்பு

நாகமரை காவிரி ஆற்றில் மூழ்கி கல்லூரி இளைஞா் உயிரிழப்பு

அம்பை தாமிரவருணி ஆற்றில் மூழ்கி எலக்ட்ரீஷியன் உயிரிழப்பு
விடியோக்கள்

உதயநிதியை பார்த்து எங்களுக்கு என்ன பயமா? அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பேச்சு! | TVK | DMK



