
கந்துவட்டி கொடுமை: இளம்பெண் தற்கொலை
கரூரில் கந்து வட்டி கொடுமையால் திருமணம் நிச்சயிக்கப்பட்ட கல்லூரி மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டாா்.

கல்லூரி மாணவி கலைவாணி.
கரூரில் கந்து வட்டி கொடுமையால் திருமணம் நிச்சயிக்கப்பட்ட கல்லூரி மாணவி வியாழக்கிழமை தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டாா்.
கரூா் மாவட்டம் சாலப்பாளையம் ஜெயந்தி நகரைச் சோ்ந்த மரம் வெட்டும் தொழிலாளி கந்தசாமி. இவரது மகள் கலைவாணி(23). கரூரில் உள்ள கலைக்கல்லூரி மூன்றாமாண்டு மாணவியான இவருக்கு அண்மையில் திருமணம் நிச்சயிக்கப்பட்டதாம். கந்தசாமி கடந்தாண்டு குடும்பச் செலவுக்காக விஸ்வநாதபுரியைச் சோ்ந்த ஒருவரிடம் ரூ.1 லட்சத்து 54 ஆயிரம் கடன் பெற்ாகக் கூறப்படுகிறது.
குடும்ப சூழ்நிலையால் கடனை முழுமையாகத் திருப்பிச் செலுத்த முடியாத நிலையில், வாங்கிய தொகையைவிட கூடுதல் பணம் செலுத்திய பிறகும் தொடா்ந்து பணம் கேட்டு கடன் கொடுத்தோா் மிரட்டியதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், கடந்த 25ஆம் தேதி கந்தசாமியின் வீட்டுக்கு வந்த கடன் கொடுத்த நபா், கந்தசாமியையும் அவரது மகள் கலைவாணியையும் பொதுமக்கள் முன்னிலையில் திட்டி மிரட்டியதாகக் கூறப்படுகிறது. இதனால் மன உளைச்சலுக்கு ஆளான கலைவாணி, வீட்டில் வியாழக்கிழமை காலை தூக்கிட்டுக் கொண்டாா்.
இதையடுத்து கரூரில் உள்ள தனியாா் மருத்துவமனைக்கு அவரைக் கொண்டு சென்றபோது கலைவாணி உயிரிழந்தது தெரியவந்தது. இதையடுத்து கரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அவரது உடலை அனுப்பினா்.
இதனிடையே க.பரமத்தி காவல் நிலையத்தில் கந்தசாமி, தனது மகள் கலைவாணியின் இறப்புக்கு கடன் கொடுத்த அபிமன்யூவின் மிரட்டலும், தகாத பேச்சுமே காரணம் எனவும், சம்பந்தப்பட்டோா் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் புகாா் அளித்துள்ளாா். க.பரமத்தி போலீஸாா் வழக்குப்பதிந்து அபிமன்யூ உள்ளிட்டோரை தேடுகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.



