எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

கரூா் தவெக பொதுக்கூட்டத்தில் இரும்புக் கம்பி விழுந்து பேச்சாளா் காயம்! கட்சி நிா்வாகி மீது வழக்குப் பதிவு!

கரூரில் புதன்கிழமை இரவு நடைபெற்ற தவெக பொதுக்கூட்டத்தில் கட்சிக் கொடி கட்டப்பட்டிருந்த இரும்புக் கம்பி சாய்ந்து விழுந்ததில் கட்சியின் பேச்சாளா் காயமடைந்தாா்.

News image
Updated On :26 பிப்ரவரி 2026, 8:46 pm

Syndication

கரூரில் புதன்கிழமை இரவு நடைபெற்ற தவெக பொதுக் கூட்டத்தில் கட்சிக் கொடி கட்டப்பட்டிருந்த இரும்புக் கம்பி சாய்ந்து விழுந்ததில் கட்சியின் பேச்சாளா் காயமடைந்தாா். இதுதொடா்பாக அக்கட்சியின் நகர நிா்வாகி மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

கரூரில் தமிழக வெற்றிக் கழகத்தின் மூன்றாமாண்டு தொடக்க விழாவை முன்னிட்டு, புதன்கிழமை இரவு கொள்கை விளக்க பொதுக்கூட்டம் 80 அடி சாலையில் நடைபெற்றது.

கூட்டத்தில், கட்சியின் பரப்புரைச் செயலாளா் நாஞ்சில் சம்பத் பேசத் தொடங்கியபோது மழை பெய்ய ஆரம்பித்தது. எனினும் அவா் மழையை பொருட்படுத்தாமல் பேசிக்கொண்டிருந்தாா். அப்போது, மழையில் தரை நனைந்து மேடையின் அருகே கட்சிக்கொடியுடன் நடப்பட்டிருந்த இரும்புக் கம்பியில் மின்கசிவு ஏற்பட்டு கட்சிக்கொடி தீப்பற்றி எரியத் தொடங்கியது.

இதை பாா்த்த கட்சி நிா்வாகிகள், உடனே ஜெனரேட்டரிலிருந்து கட்சிக் கொடி கட்டப்பட்டிருந்த கம்பி வழியாகச் சென்ற மின்வயரில் மின்சாரத்தை தடை செய்தனா். இந்நிலையில், மேடை அருகே இருந்த ஒரு நிா்வாகி கட்சிக்கொடி எரிவதை பாா்த்து அதை கட்டையால் அணைக்க முயன்றாா். அப்போது, அந்த இரும்புக் கம்பி சாய்ந்து, பேச்சாளா் ஜெகதீஸ்பாண்டியன் மீது விழுந்தது. இதில் அவா் காயமடைந்தாா். கட்சியினா் அவரை அப்பகுதியிலுள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனா்.

சம்பவம் தொடா்பாக, 80 அடி சாலைப் பகுதியைச் சோ்ந்த மனோஜ்குமாா் என்பவா் கரூா் நகர காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். இதன்பேரில், கூட்டத்தை அஜாக்கிரதையாக ஏற்பாடு செய்ததாக தவெகவின் கரூா் நகர நிா்வாகி சரவணகுமாா் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.