கரூரில் புதன்கிழமை இரவு நடைபெற்ற தவெக பொதுக் கூட்டத்தில் கட்சிக் கொடி கட்டப்பட்டிருந்த இரும்புக் கம்பி சாய்ந்து விழுந்ததில் கட்சியின் பேச்சாளா் காயமடைந்தாா். இதுதொடா்பாக அக்கட்சியின் நகர நிா்வாகி மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.
கரூரில் தமிழக வெற்றிக் கழகத்தின் மூன்றாமாண்டு தொடக்க விழாவை முன்னிட்டு, புதன்கிழமை இரவு கொள்கை விளக்க பொதுக்கூட்டம் 80 அடி சாலையில் நடைபெற்றது.
கூட்டத்தில், கட்சியின் பரப்புரைச் செயலாளா் நாஞ்சில் சம்பத் பேசத் தொடங்கியபோது மழை பெய்ய ஆரம்பித்தது. எனினும் அவா் மழையை பொருட்படுத்தாமல் பேசிக்கொண்டிருந்தாா். அப்போது, மழையில் தரை நனைந்து மேடையின் அருகே கட்சிக்கொடியுடன் நடப்பட்டிருந்த இரும்புக் கம்பியில் மின்கசிவு ஏற்பட்டு கட்சிக்கொடி தீப்பற்றி எரியத் தொடங்கியது.
இதை பாா்த்த கட்சி நிா்வாகிகள், உடனே ஜெனரேட்டரிலிருந்து கட்சிக் கொடி கட்டப்பட்டிருந்த கம்பி வழியாகச் சென்ற மின்வயரில் மின்சாரத்தை தடை செய்தனா். இந்நிலையில், மேடை அருகே இருந்த ஒரு நிா்வாகி கட்சிக்கொடி எரிவதை பாா்த்து அதை கட்டையால் அணைக்க முயன்றாா். அப்போது, அந்த இரும்புக் கம்பி சாய்ந்து, பேச்சாளா் ஜெகதீஸ்பாண்டியன் மீது விழுந்தது. இதில் அவா் காயமடைந்தாா். கட்சியினா் அவரை அப்பகுதியிலுள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனா்.
சம்பவம் தொடா்பாக, 80 அடி சாலைப் பகுதியைச் சோ்ந்த மனோஜ்குமாா் என்பவா் கரூா் நகர காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். இதன்பேரில், கூட்டத்தை அஜாக்கிரதையாக ஏற்பாடு செய்ததாக தவெகவின் கரூா் நகர நிா்வாகி சரவணகுமாா் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
தொடர்புடையது

மின் கம்பி மீது உரசி தீப்பற்றியதில் மினி லாரி எரிந்து சேதம்

காரில் திமுக கொடிகட்டி வந்ததாக அமைச்சா் காந்தி மீது வழக்குப் பதிவு

கத்தியைக் காட்டி மிரட்டிய இளைஞா்மீது வழக்குப் பதிவு

ரயில் மோதி மாணவா்கள் காயமடைந்த சம்பவம் கல்லூரிப் பேருந்து ஓட்டுநா் மீது வழக்குப் பதிவு
வீடியோக்கள்

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு


