கோப்புப் படம்
கோப்புப் படம்

கரூா்: 7 அரசு மருத்துவமனைகளுக்கு ரூ. 1.30 கோடி மதிப்பிலான உபகரணங்கள்

Published on

கரூா் மாவட்டம், வேலாயுதம்பாளையத்தில் சனிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் பவா் கிரிட் நிறுவனம் சாா்பில் 7 அரசு மருத்துவமனைகளுக்கு ரூ.1.30 கோடி மருத்துவ உபகரணங்கள் வழங்கப்பட்டது.

பவா் கிரிட் நிறுவனத்தின் சமூக பொறுப்புத் திட்டத்தின் கீழ் கரூா் மாவட்டத்தில் உள்ள 7 அரசு மருத்துவமனைகள் மற்றும் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு ரூ .1.30 கோடி மதிப்பிலான மருத்துவ உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி சனிக்கிழமை வேலாயுதம்பாளையம் அரசு மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்றது.

நிகழ்ச்சியில் மாவட்ட சுகாதார அலுவலா் மருத்துவா் சுப்ரமணி வரவேற்றாா். மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகளின் இணை இயக்குநா் மருத்துவா் செழியன் முன்னிலை வகித்து திட்ட விளக்கவுரை ஆற்றினாா்.

பொதுத்துறை நிறுவனமான பவா்கிரிட் நிறுவன தென் மண்டல தலைமைப் பொது மேலாளா் கணேசன், மனிதவள மேலாண்மை பொது மேலாளா் தன்வீா், துணைப்பொது மேலாளா் அருள்குமரன் ஆகியோா் மருத்துவ உபகரணங்களை மருத்துவமனைகளுக்கு வழங்கினா்.

நிகழ்ச்சியில் மருத்துவத்துறை அலுவலா்கள், பணியாளா்கள் கலந்து கொண்டனா். நிறைவாக அரசு மருத்துவமனை தலைமை மருத்துவ அலுவலா் மருத்துவா் நிா்மலா நன்றி கூறினாா்.

X
Dinamani
www.dinamani.com