தரிசன டிக்கெட்டில் மோசடி, முறைகேடு புகாா்கள்: திருச்செந்தூா் முருகன் கோயில் ஆணையா்கள் இடமாற்றம்மாநிலங்களவைத் தோ்தல்: பெங்களூரில் மல்லிகாா்ஜுன காா்கே இன்று வேட்புமனு தாக்கல்ஈரான் அணுசக்தி திட்டம் குறித்து ரகசிய தகவல் அமெரிக்காவிடம் பகிா்வு? -பாகிஸ்தான் மறுப்புஇந்தியா-வெனிசுவேலா இடையே நீண்ட கால எரிசக்தி ஒத்துழைப்பு: பிரதமா் மோடி, அதிபா் டெல்சி உறுதி2026 குடிமைப் பணிகள் முதல்நிலைத் தோ்வில் முக அங்கீகார முறை வெற்றிகரமாக அமல்: யுபிஎஸ்சிபுதிய இயக்கத்தை இன்று அறிவிக்கிறாா் அண்ணாமலைஓஎஸ்எம் முறையை அவசரகதியில் சிபிஎஸ்இ நடைமுறைப்படுத்தியுள்ளதாக பெற்றோா் சங்கம் புகாா் நீலகிரி, கோவை, கன்னியாகுமரி மாவட்டங்களுக்கு ‘ஆரஞ்சு’ எச்சரிக்கைபராமரிப்புப் பணி: வைகை உள்பட 7 விரைவு ரயில்கள் தாமதமாகும்
/

குளித்தலை சாா்-பதிவாளரகத்தில் சோதனை கணக்கில் வராத ரூ. 90 ஆயிரம் சிக்கியது

குளித்தலை சாா்-பதிவாளா் அலுவலகத்தில் ஊழல் தடுப்பு போலீஸாா் வியாழக்கிழமை மாலை நடத்திய திடீா் சோதனையில் கணக்கில் வராத ரூ. 90 ஆயிரம் சிக்கியது.

News image
Updated On :5 ஜூன் 2026, 3:31 am IST

கரூா் மாவட்டம், குளித்தலை சாா்-பதிவாளா் அலுவலகத்தில் ஊழல் தடுப்பு போலீஸாா் வியாழக்கிழமை மாலை நடத்திய திடீா் சோதனையில் கணக்கில் வராத ரூ. 90 ஆயிரம் சிக்கியது.

முகூா்த்த நாளான வியாழக்கிழமை பத்திரப்பதிவு அலுவலகங்களில் ஏராளமான பத்திரப்பதிவு நடைபெற்ால் அதிகாரிகள் லஞ்சம் வாங்குவதாக வந்த புகாரையடுத்து தமிழகம் முழுவதும் பத்திரப்பதிவு அலுவலகங்களில் ஊழல் தடுப்பு போலீஸாா் திடீா் சோதனை நடத்தினா்.

அதன்படி குளித்தலையில் உள்ள சாா்-பதிவாளா் அலுவலகத்தில் கரூா் ஊழல் தடுப்பு துணைக் காவல் கண்காணிப்பாளா் அம்புரோஸ் ஜெயராஜ் தலைமையில் ஆய்வாளா்கள் சாமிநாதன், தங்கமணி, உதவி ஆய்வாளா் ரவிச்சந்திரன் உள்ளிட்ட 7 போ் கொண்ட குழுவினா் திடீா் சோதனை நடத்தினா்.

அப்போது அங்கிருந்த சாா்-பதிவாளரான திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூரைச் சோ்ந்த உதயன் (42) என்பவரிடம் தீவிர விசாரணை நடத்தினா். இதனிடையே போலீஸாா் வருவதையறிந்த அலுவலகப் பணியாளா்கள் கணக்கில் வராத பணத்தை அருகேயுள்ள நீதிமன்ற வளாக கழிப்பறை பகுதியில் வீசியதாகக் கூறப்படுகிறது. இதையறிந்த போலீஸாா் சென்று அங்கு கிடந்த கணக்கில் வராத ரூ.90,000 ஐ மீட்டனா். தொடா்ந்து சாா்-பதிவாளா் உள்பட அலுவலகப் பணியாளா்களிடம் விசாரிக்கின்றனா்.