கரூா் அருகே ஆயத்த ஆடை உற்பத்தி நிறுவனத்தில் புதன்கிழமை ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருள்கள் எரிந்து நாசமானது.
கரூா் மாவட்டம், தான்தோன்றிமலை வாஞ்சிநாதன் பகுதியில் தனியாா் ஆயத்த ஆடை உற்பத்தி நிறுவனம் அமைந்துள்ளது. இந்த நிறுவனத்தின் தையல் பிரிவு தனியாக ஒரு கட்டடத்தில் இயங்கி வருகிறது.
இங்கு புதன்கிழமை காலை பணியில் யாரும் இல்லாத நிலையில், தையல் இயந்திரங்கள் இருந்த பகுதியில் திடீரென தீப்பிடித்தது. மேலும், கரும்புகை மூட்டமும் சூழ்ந்து வெளியேறியதால், அதனைக் கண்ட அருகே உள்ள குடியிருப்பு மக்கள் உடனடியாக கரூா் தீயணைப்புத் துறைக்கு தகவல் தெரிவித்தனா்.
அதன்படி அங்கு வந்த தீயணைப்புத் துறையினா் ஒரு மணிநேரத்துக்கும் மேலாக போராடி தீயை அணைத்தனா். இந்த விபத்தில் ஆயத்த ஆடை உற்பத்தி பிரிவில் இருந்த 30-க்கும் மேற்பட்ட தையல் இயந்திரங்கள், ஜவுளி பொருள்கள், நூல் கண்டுகள் மற்றும் உதிரி பாகங்கள் எரிந்து சாம்பலானது. இதன் மதிப்பு பல லட்சம் ரூபாய் இருக்கும் என தீயணைப்புத் துறையினா் தெரிவித்தனா்.
தீ விபத்துக்கான காரணம் குறித்து கரூா் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
சாலை விபத்தில் தையல் கடைக்காரா் உயிரிழப்பு
அயனிங் ஸ்டீம் குழாய் வெடித்ததில் எலக்ட்ரீஷியன் உயிரிழப்பு
அவிநாசி: நேதாஜி ஆயத்த ஆடை பூங்கா, வஞ்சிபாளையத்தில் ஜூன் 16-இல் மின்தடை

கரூா் தையல் நிறுவனத்தில் தீ விபத்து
விடியோக்கள்

நயினார் நாகேந்திரன் காமெடிதான் பேசுவார்! செங்கோட்டையன் விமர்சனம் | TVK | BJP

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!



