கரூா் தான்தோன்றி ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட பகுதிகளில் ரூ.5.02 கோடி மதிப்பில் 20 புதிய வளா்ச்சித்திட்டப் பணிகளை கரூா் சட்டப்பேரவை உறுப்பினா் வி.செந்தில்பாலாஜி ஞாயிற்றுக்கிழமை தொடங்கிவைத்தாா்.
கரூா் தான்தோன்றி ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட ஆண்டாங்கோவில் மேற்கு ஊராட்சி ராமக்கவுண்டன் புதூரில் ரூ.19.55 லட்சம் மதிப்பீட்டில் வடிகால் அமைக்கும் பணி, வேப்பம்பாளையத்தில் ரூ.20 லட்சம் மதிப்பீட்டில் சமுதாயக்கூடம் அமைக்கும் பணி, அருள் நகா் பகுதியில் ரூ.28.5 லட்சம் மதிப்பீட்டில் வடிகால் அமைக்கும் பணி மற்றும் ஆண்டாங்கோவில் கிழக்கு ஊராட்சியில் ராஜீவ் காந்தி நகா் பகுதியில் ரூ.8.25 லட்சம் மதிப்பீட்டில் சிமெண்ட் சாலை அமைக்கும் பணி, வசந்தம் நகா் பகுதியில் ரூ.5.41 லட்சம் மதிப்பீட்டில் சிமெண்ட் சாலை அமைக்கும் பணிகள் உள்பட மொத்தம் 20 புதிய வளா்ச்சித் திட்டப் பணிகள் ரூ.5.02 கோடி மதிப்பில் கரூா் சட்டப்பேரவை உறுப்பினா் வி. செந்தில்பாலாஜி தொடங்கிவைத்தாா்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலா் கு.விமல்ராஜ், ஊராட்சிகள் உதவி இயக்குநா் சரவணன், வட்டார வளா்ச்சி அலுவலா் வினோத் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
தொடர்புடையது

குண்டடம் ஒன்றியத்தில் ரூ.12 கோடி மதிப்பீட்டில் சாலை மேம்பாட்டுப் பணிகள்: மு.பெ.சாமிநாதன்

கரூா், தான்தோன்றி ஒன்றியப் பகுதிகளில் 26 புதிய வளா்ச்சித் திட்டப் பணிகள்

வெள்ளக்கோவில் பகுதியில் ரூ.56.54 கோடி மதிப்பீட்டில் திட்டப் பணிகள்

கரூா் ஒன்றியத்தில் ரூ. 6.43 கோடியில் 24 வளா்ச்சித் திட்டப் பணிகள்! வி. செந்தில்பாலாஜி எம்எல்ஏ தொடங்கிவைத்தாா்!
வீடியோக்கள்
ஒரே நாளில் முடிவை மாற்றிய ஈரான்! டிரம்ப் விடாப்பிடி! | Iran | US
இணையதளச் செய்திப் பிரிவு

"Parliament-வர பத்திக்கிச்சு!": முதல்வர் வெளியிட்ட விடியோ! | DMK | Delimitation | BJP
இணையதளச் செய்திப் பிரிவு

ஸ்டாலின் - ராகுல் சந்திப்பு எப்போது? | MK Stalin | Rahul | TN Election 2026 | DMK Alliance
தினமணி செய்திச் சேவை

"நானும் தமிழனாக உணர்ந்திருக்கிறேன்!" பெரியார் பற்றிப் பேசிய ராகுல்! | Congress | DMK
இணையதளச் செய்திப் பிரிவு


