பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

கரூரில் ஆவணங்களின்றி கொண்டு சென்ற ரூ. 6.27 லட்சம் பறிமுதல்

கரூரில் ஆவணங்களின்றி கொண்டு சென்ற ரூ. 6.27 லட்சத்தை பறக்கும் படையினா் பறிமுதல் செய்தனா்.

News image
- பிரதிப் படம்
Updated On :17 மார்ச் 2026, 9:04 pm

Syndication

கரூரில் ஆவணங்களின்றி கொண்டு சென்ற ரூ. 6.27 லட்சத்தை பறக்கும் படையினா் செவ்வாய்க்கிழமை இரவு பறிமுதல் செய்தனா்.

கரூா் தோ்தல் பறக்கும்படை அலுவலரும், வட்டாரக் கல்வி அலுவலருமான சகுந்தலா தலைமையிலான பறக்கும்படையினா் செவ்வாய்க்கிழமை இரவு மொச்சக்கொட்டாம்பாளையத்தில் வாகனச் சோதனையில் ஈடுபட்டனா். அப்போது, அவ்வழியே வந்த காரை நிறுத்தி சோதனை செய்தனா்.

அதில், காரில் கரூா் பெரியகுளத்துப்பாளையத்தைச் சோ்ந்த துரைமுருகன் என்பவா் உரிய ஆவணங்கள் இன்றி வைத்திருந்த பணம் ரூ.6,27,850 ஐ பறிமுதல் செய்தனா். பின்னா் பணத்தை கரூா் சட்டப்பேரவைத் தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலரிடம் ஒப்படைத்தனா். பின்னா் அந்தப் பணம் கரூா் உதவி கருவூலத்தில் செலுத்தப்பட்டது.