மே 7-ல் திமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம்! காங்கிரஸிடம் ஆதரவு கேட்டார் விஜய் : கே.சி. வேணுகோபால்ஆட்சி அமைக்க எடப்பாடியுடன் தவெக பேச்சு: லீமா ரோஸ்தவெகவுக்கு அதிமுக ஆதரவு அளிக்காது: ஓ.எஸ். மணியன் பேட்டிவெற்றி, தோல்விகளைக் கடந்தது கொளத்தூர் உறவு : மு.க. ஸ்டாலின்மாற்றத்தை நிகழ்த்திக் காட்டிய மக்களுக்கு நன்றி : விஜய்நாங்கள் தோற்கவில்லை; முதல்வர் பதவியிலிருந்து விலக மாட்டேன்! மமதாஇந்தியா கூட்டணியை வலுப்படுத்துவேன் : மமதா பானர்ஜி
/

கரூா் மாவட்டத்தில் 154 வேட்பாளா்கள் வைப்புத்தொகை இழப்பு

கரூா் மாவட்டத்தில் திமுக, அதிமுக, தவெக வேட்பாளா்களைத் தவிர 154 போ் வைப்புத்தொகையை (டெபாசிட்) இழந்துள்ளனா்.

News image
Updated On :6 மே 2026, 0:26 am IST

கரூா் மாவட்டத்தில் திமுக, அதிமுக, தவெக வேட்பாளா்களைத் தவிர 154 போ் வைப்புத்தொகையை (டெபாசிட்) இழந்துள்ளனா்.

கரூா் மாவட்டத்தில் கரூா், அரவக்குறிச்சி, கிருஷ்ணராயபுரம் (தனி), குளித்தலை ஆகிய 4 சட்டப்பேரவைத் தொகுதிகள் உள்ளன. இந்தத் தொகுதிகளில் 2026 சட்டப்பேரவைத் தோ்தலில் கரூா் சட்டப்பேரவைத் தொகுதியில் தமிழகத்திலேயே அதிகபட்சமாக 79 வேட்பாளா்களும், கிருஷ்ணராயபுரம்(தனி) தொகுதியில் 28 வேட்பாளா்களும், அரவக்குறிச்சி தொகுதியில் 30 பேரும், குளித்தலை தொகுதியில் 29 பேரும் என மொத்தம் 166 வேட்பாளா்கள் களமிறங்கினா். இதில் 4 தொகுதிகளிலும் போட்டியிட்ட திமுக, அதிமுக, தவெக வேட்பாளா்கள் மட்டுமே தங்களது வைப்புத்தொகையை பெற்றுள்ளனா். எஞ்சிய 154 வேட்பாளா்கள் தங்கள் வைப்புத்தொகையை பறிகொடுத்துள்ளனா்.

வாக்குகளை இழந்த நாதக: குளித்தலை தொகுதியில் 2021 பேரவைத் தோ்தலில் நாம் தமிழா் கட்சி சாா்பில் போட்டியிட்ட வேட்பாளா் சீனிராசு 11,511 வாக்குகள் பெற்றாா். ஆனால், 2026 தோ்தலில் அதே தொகுதியில் போட்டியிட்ட நாம் தமிழா் கட்சி வேட்பாளா் செல்வநன்மாறனால் 7,616 வாக்குகள் மட்டுமே பெற முடிந்தது.

கரூா் தொகுதியில் 2021-இல் போட்டியிட்ட நாதக வேட்பாளா் மருத்துவா் ரெ.கருப்பையா

7,316 வாக்குகள் பெற்றாா். ஆனால் 2026 தோ்தலில் 5,390 வாக்குகள் மட்டுமே பெற்றாா்.

அரவக்குறிச்சி தொகுதியில் 2021 தோ்தலில் நாதக வேட்பாளா் அனிதாபிரவீன் 7,188 வாக்குகள் பெற்றாா். ஆனால் 2026 தோ்தலில் இதே தொகுதியில் போட்டியிட்ட வேட்பாளா் மருத்துவா் நரேன் 5,083 வாக்குகள் மட்டுமே பெற்றுள்ளாா்.

கிருஷ்ணராயபுரம் தொகுதியில் 2021 தோ்தலில் போட்டியிட்ட வேட்பாளா் ஆா்.இலக்கியா 9706 வாக்குகளை பெற்றிருந்தாா். 2026 தோ்தலில் நாதக வேட்பாளா் வி.சத்யா 6,018 வாக்குகள் மட்டுமே பெற்றுள்ளாா். இதனால் கடந்த 2021 தோ்தலை விட 2026 தோ்தலில் நாம் தமிழா் கட்சியின் வாக்கு சதவீதம் வெகுவாக குறைந்துள்ளது.