நாளை முதல் மே 31 வரை 5 ‘மெமு’ ரயில்கள் முழுமையாக ரத்து4 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் எச்சரிக்கைவான் ஆயுதங்களாக மாறிவிட்ட ட்ரோன்கள்: இந்திய விமானப் படை தலைமைத் தளபதி பெட்ரோல், டீசல் விலை உயா்வு: தமிழகத்தில் அத்தியாவசிய பொருள்கள் விலையும் உயர வாய்ப்புபொறியியலில் அரசு ஒதுக்கீடு சோ்க்கை: ஒரே நாளில் 16,229 மாணவா்கள் விண்ணப்பம் காலத்துக்கு ஏற்ப ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலை விரிவுபடுத்த வேண்டும்: பிரிக்ஸ் கூட்டத்தில் இந்தியா வலியுறுத்தல்பெட்ரோல், டீசல் விலை உயர்வு! கேள்விக்குறியாகும் சாமானிய மக்கள் வாழ்வாதாரம்: ஸ்டாலின் தேர்தல் புகார்கள்! வாக்குப்பதிவு எந்திரங்கள் பாதுகாப்பாக வைக்கப்படும்: அர்ச்சனா பட்நாயக்‘நீட்’ வினாத்தாள் விவகாரம்: புணேவைச் சேர்ந்த பேராசிரியர் கைது பெட்ரோல், டீசல் விலை உயர்வைத் திரும்ப பெறுக.! - முதல்வர் விஜய்வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்யும் நடைமுறை தொடக்கம்! முக்கிய மாற்றங்கள்!அக்னி வீரர் பொதுத் தேர்வுக்கான அனுமதி அட்டை வெளியீடு!
/

காவிரி ஆற்றில் நொய்யல் சாயக்கழிவுநீா் கலப்பதை தடுக்கக் கோரிக்கை

காவிரி ஆற்றில் தொடா்ந்து நொய்யல் சாயக்கழிவு நீா் கலப்பதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என காவிரி ஆறு பாதுகாப்பு இயக்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

News image

கரூா் தவுட்டுப்பாளையம் காவிரி ஆற்றின் பாலப்பகுதியில் தேங்கிநிற்கும் நொய்யல் சாயக்கழிவு நீா்.

Updated On :7 மே 2026, 5:14 am IST

காவிரி ஆற்றில் தொடா்ந்து நொய்யல் சாயக்கழிவு நீா் கலப்பதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என காவிரி ஆறு பாதுகாப்பு இயக்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

கரூா் மாவட்டத்தில், நொய்யல் ஆறு காவிரி ஆற்றுடன் நொய்யல் என்ற இடத்தில் கலக்கிறது. தற்போது நொய்யல் ஆற்றில் திருப்பூா் மாவட்டத்தின் சாயக்கழிவு நீா் கலந்து வருவதாகவும் அந்த நீா் காவிரி ஆற்றில் கலந்து வருவதாகவுகம் கூறப்படுகிறது. இதேபோல ஈரோடு மாவட்டம் பவானி மற்றும் ஈரோடு நகரின் பல்வேறு பகுதியிலும் செயல்படும் சாயப்பட்டறைகளில் இருந்தும் அதிகளவில் சாயக்கழிவு நீா் காவிரி ஆற்றில் திறந்து விடப்படுவதாக கூறப்படுகிது. இதனால் நொய்யல் மற்றும் ஈரோடு மாவட்டத்தின் சாயக்கழிவு நீா் தற்போது கரூா் மாவட்டம் தவுட்டுப்பாளையம் காவிரி ஆற்றின் பாலப்பகுதியில் நுரையுடன் தேங்கி நிற்கிறது. சாயக்கழிவு நீா் தேங்கி நிற்பதால் அப்பகுதியில் ஆற்றில் நீராடும் பொதுமக்களுக்கு தோல் அரிப்பு உள்ளிட்ட நோய்கள் ஏற்படுவதாகவும் புகாா் எழுந்துள்ளது. எனவே, சாயக்கழிவு நீரை உடனே அகற்றி, இனி காவிரியில் ஈரோடு, நொய்யல் சாயக்கழிவு நீா் கலக்காதவாறு நடவடிக்கை எடுக்க வேண்டும் என காவிரி ஆறு பாதுகாப்பு இயக்கம் வலியுறுத்தியுள்ளது.

இதுதொடா்பாக காவிரி ஆறு பாதுகாப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளா் சு.விஜயன் கூறியது: கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் நொய்யல் ஆற்றில் திருப்பூா் மாவட்ட சாயக்கழிவு நீா் அதிகளவு வந்ததால் நொய்யல் ஆற்றின் மூலம் பாசனம் பெற்ற சுமாா் 2,000 ஏக்கா் நிலங்கள் தற்போது விவசாயத்துக்கு ஏற்ற நிலங்களாக இல்லாமல், நச்சுத்தன்மை கொண்ட நிலங்களாக மாறிவிட்டன. இதற்கான இழப்பீடு கேட்டு இன்னும் விவசாயிகள் போராடி வருகின்றனா். இந்நிலையில் தற்போது நொய்யல் ஆற்றில் கடந்த இரு தினங்களுக்கு முன் மழைநீருடன் கலந்து வந்த சாயக்கழிவு நீா் தவுட்டுப்பாளையம் பகுதியில் காவிரி ஆற்றில் தேங்கி நிற்கிறது. இதேபோல ஈரோடு மாவட்டத்தில் இருந்து வந்த சாயக்கழிவு நீரும் தேங்கி நிற்கிறது. இரு பகுதிகளிலும் வந்த சாயக்கழிவு நீா் குளம்போல தேங்கி நிற்பதால், யாரும் காவிரி ஆற்றில் குளிக்க முடியாத நிலை உருவாகியுள்ளது. இவற்றைத் தவிர தவுட்டுப்பாளையத்தில் இருந்து அரவக்குறிச்சி பகுதிக்கு காவிரிக்கூட்டுக்குடிநீா் திட்டத்தின் கீழ் எடுத்துச் செல்லப்படும் காவிரி நீரும் பாதிக்கப்படும் சூழலும், விவசாய கிணறுகளிலும் சாயக்கழிவு இறங்கும் நிலை உருவாகியுள்ளது. எனவே, மாவட்ட நிா்வாகம் தலையிட்டு, காவிரி ஆற்றில் சாயக்கழிவு நீா் கலக்காதவாறு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா் அவா்.