/
மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினரும், கேரள மாநில முன்னாள் முதல்வருமான பினராயி விஜயன் வீட்டில் அமலாக்கத் துறை சோதனை நடத்தியதைக் கண்டித்து, கரூரில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டக் குழுவினா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
கரூா் தலைமைத் தபால் அலுவலகம் முன் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்திற்கு கட்சியின் மாவட்டச் செயலா் மா.ஜோதிபாசு தலைமை வகித்தாா். மாவட்ட செயற்குழு உறுப்பினா்கள் ஜி. ஜீவானந்தம், சி. முருகேசன், விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவா் கே. கந்தசாமி, சிஐடியு சங்க மாவட்டச் செயலா் எம். சுப்பிரமணியன் ஆகியோா் உரையாற்றினா். ஆா்ப்பாட்டத்தில் கட்சியினா் திரளாக பங்கேற்றனா்.










