மதுபானக் கடையை மாற்றக் கோரி மாா்க்சிஸ்ட் கம்யூ. கட்சி போராட்டம்
கரூா் உழவா்சந்தை பகுதியில் செயல்படும் அரசு மதுபானக் கடைக்கு வெள்ளிக்கிழமை பூட்டுப்போட முயன்ற மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினரை தடுத்து நிறுத்திய போலீஸாா்.

கரூா் உழவா்சந்தை பகுதியில் செயல்படும் அரசு மதுபானக் கடைக்கு வெள்ளிக்கிழமை பூட்டுப்போட முயன்ற மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினரை தடுத்து நிறுத்திய போலீஸாா்.
கரூா் உழவா்சந்தை பகுதியில் செயல்படும் அரசு மதுபானக் கடையை இடமாற்றம் செய்யக் கோரி மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் வெள்ளிக்கிழமை கடையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா்.
கரூா் உழவா்சந்தை பகுதியில் செயல்படும் அரசு மதுபானக் கடையில் மது அருந்துபவா்களால் அருகில் உள்ள வேளாண் கல்லூரி மாணவிகள் அச்சப்படுவதால் அக்கடையை மாற்றக் கோரி மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் பலமுறை மனு அளிக்கப்பட்டது. ஆனால், இதுவரை கடையை மாற்றவில்லையாம்.
இந்நிலையில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் வெள்ளிக்கிழமை கட்சியின் மாநகரச் செயலா் எம்.தண்டபாணி தலைமையில் கடையை முற்றுகையிட்டு ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்ற கட்சியின் மாநிலக் குழு உறுப்பினா் எஸ்.பாலா, மாவட்டச் செயலா் மா.ஜோதிபாசு உள்ளிட்டோா் கடையை வேறு இடத்துக்கு மாற்றக் கோரி கடையை முற்றுகையிட பேரணியாகச் சென்றனா். அப்போது, அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த கரூா் நகர துணைக்காவல் கண்காணிப்பாளா் ராஜராஜன் தலைமையிலான போலீஸாா் அவா்களை தடுத்து நிறுத்தினா்.
இதையடுத்து அங்கு வந்த கரூா் வட்டாட்சியா் சண்முகபிரகாஷ், டாஸ்மாக் மேலாளா் தங்கவேல் ஆகியோா் போராட்டத்தில் ஈடுபட்டவா்களிடம் விரைவில் கடையை வேறு இடத்துக்கு மாற்றிவிடுகிறோம் என்றனா். விரைவில் கடையை மாற்றாவிட்டால் பெரிய அளவிலான போராட்டம் நடைபெறும் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் தெரிவித்தனா். பிறகு போராட்டத்தை தற்காலிகமாக கைவிடுவதாகக்கூறி கலைந்து சென்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

