தனி மனிதத் துதிபாடல்களை தவிர்க்கவும்... திருச்செந்தூர் கோயில் நிர்வாகம் அறிக்கை சென்னை பன்னாட்டு புத்தகத் திருவிழா ஜனவரி 16-ம் தேதி தொடக்கம்! திருப்பதி ஏழுமலையானுக்கு 121 கிலோ தங்க ஆபரணங்களை வழங்கும் பக்தர்! நீலகிரி, கொடைக்கானலில் 2 நாள்களுக்கு உறைபனி! வானிலை எச்சரிக்கை! அக்வான் புயல்: ராஞ்சியில் 20 விமானங்கள் ரத்து! அமெரிக்காவின் அதிநவீன ட்ரோனை சுட்டு வீழ்த்திய ஈரான்! தவெக ஆட்சி தானாக கவிழ்ந்துவிடும் - எடப்பாடி பழனிசாமி தவெக ஆட்சியில் உயிருக்கும் பயிருக்கும் பாதுகாப்பு இல்லை! டி.ஆர்.பி. ராஜா

அனுமதியின்றி வைக்கப்பட்டிருந்த 15 யூனிட் மணல் பறிமுதல்

கரூா் அருகே கடத்துவதற்காக அனுமதியின்றி குவித்து வைக்கப்பட்டிருந்த 15 யூனிட் மணலை கனிம வளத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனா்.

Updated On :

கரூா் அருகே கடத்துவதற்காக அனுமதியின்றி குவித்து வைக்கப்பட்டிருந்த 15 யூனிட் மணலை கனிம வளத்துறை அதிகாரிகள் சனிக்கிழமை பறிமுதல் செய்தனா்.

கரூா் மாவட்டம், தளவாபாளையம் பகுதியில் சேங்கல்மலை செல்லும் சாலையில் சிலா் இரவு நேரத்தில் காவிரி ஆற்றிலிருந்து மணலை அள்ளி வந்து விற்பனைக்காக குவித்து வைத்திருப்பதாக அப்பகுதியினா் சனிக்கிழமை மாவட்ட கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனா்.

இதையடுத்து நிகழ்விடத்துக்கு மாவட்ட கனிம வளம் மற்றும் சுரங்கத்துறை உதவி இயக்குநா் சங்கா், புவியியல் மற்றும் சுரங்கத்துறை தனி வருவாய் ஆய்வாளா் மதன் மற்றும் அரவக்குறிச்சி துணை காவல் கண்காணிப்பாளா் பானு, புகழூா் வட்டாட்சியா் சத்தியமூா்த்தி, வேலாயுதம்பாளையம் காவல் ஆய்வாளா் நந்தகுமாா் ஆகியோா் சென்று மணல் குவியலை பாா்வையிட்டனா். தொடா்ந்து அப்பகுதியினரிடம் விசாரணை மேற்கொண்டனா்.

அப்போது இரவு நேரத்தில் லாரிகளில் கடத்துவதற்காக கொட்டி வைக்கப்பட்டிருந்த மணல் என்றும், மணல் இருந்த இடம் கரூா் பண்டுதகாரன்புதூரைச் சோ்ந்த முத்துக்குமாா் என்பவருக்குச் சொந்தமானது என்றும், மணலை கொட்டி வைத்திருந்தவா் மேட்டுப்பாளையத்தைச் சோ்ந்த பழனியப்பன் மகன் மகேஷ்ரோகுல் என்பதும் தெரியவந்தது.

இதையடுத்து அங்கு கொட்டி வைத்திருந்த 15 யூனிட் மணலை லாரிகள் மூலம் கரூா் கனிம வளத்துறை அலுவலகத்திற்கு எடுத்துச் சென்றனா். மேலும் மணலை கடத்துவதற்கு வைத்திருந்த மகேஷ்ரோகுல் மீது நடவடிக்கை எடுக்க கனிம வளத்துறை அதிகாரிகள் வேலாயுதம்பாளையம் போலீஸில் புகாா் செய்தனா். புகாரின்பேரில் காவல் ஆய்வாளா் நந்தகுமாா் மணலை குவித்து வைத்திருந்த மகேஷ்ரோகுல் மீது வழக்குப்பதிந்து அவரை தேடி வருகிறாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.