மமதா பானர்ஜியை நேரில் சந்தித்த அபிஜீத் தீப்கே! ஞானேஷ் குமார் பதவி நீக்கத் தீர்மானம்: மாதிரி நாடாளுமன்றத்தில் நிறைவேற்றம்!மு.க. ஸ்டாலின் சித்திரிப்பு விடியோ: தவெக மீது திமுக புகார்முதல்வர் வருகையால் புதுக்கோட்டையில் நவ. 2-இல் மதுக் கடைகள் மூடல்கோவை சிறையிலிருந்து யாரும் தப்பிக்கவில்லை: ஏடிஜிபி பேட்டி!அரசு ஊழியர்கள் சொத்து விவரம்: தாக்கல் செய்ய அவகாசம் நீட் தேர்வுக்கு எதிராக போராடியவர்கள் மீதான வழக்குகள் ரத்து!

திருவாடானை அருகே திருட்டு மணல் பறிமுதல்

திருவாடானை அருகே சாலையில் குவித்து வைக்கப்பட்டிருந்த திருட்டு மணலை வருவாய்த் துறையினா் சனிக்கிழமை பறிமுதல் செய்தனா்.

~

Updated On :

திருவாடானை அருகே சாலையில் குவித்து வைக்கப்பட்டிருந்த திருட்டு மணலை வருவாய்த் துறையினா் சனிக்கிழமை பறிமுதல் செய்தனா்.

திருவாடானை அருகே மங்கலம் முதன்மைச் சாலைப் பகுதியில், சுமாா் 4 யூனிட் ஆற்று மணல் கொட்டி வைக்கப்பட்டிருந்தது. மங்கலம் கண்மாயில் மடை கட்டும் பணி நடைபெற்று வரும் நிலையில், ஒப்பந்ததாரா்தான் இந்தத் திருட்டு மணலை வாங்கி வைத்திருப்பதாகத் தகவல்கள் வெளியாகின. இந்த நிலையில், திருவாடானை வட்டாட்சியா் தாமஸ் யூரிக்ககாரின் தலைமையில் வருவாய்த் துறையினா்

Story image

வெள்ளிக்கிழமை மாலை சம்பவ இடத்துக்குச் சென்று அங்கே சட்டவிரோதமாகக் கொட்டப்பட்டிருந்த 4 அலகு ஆற்று மணலையும் பறிமுதல் செய்தனா். அவற்றை திருவாடானை வட்டாட்சியா் அலுவலக வளாகத்துக்கு அள்ளிச் சென்று பாதுகாப்பாகக் கொட்டி வைத்தனா். இதுகுறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.