அம்மன் கோயிலுக்குள் புகுந்து தாலி, உண்டியல் பணம் திருட்டு
கரூா் மாவட்டம், லாலாப்பேட்டை அருகே அம்மன் கோயிலுக்குள் புதன்கிழமை நள்ளிரவு புகுந்த மா்ம நபா்கள் அம்மன் தாலி 4 கிராம், உண்டியல் பணம் ஆகியவற்றைத் திருடிச் சென்றனா்.

லாலாப்பேட்டை அருகே மா்ம நபா்களால் புதன்கிழமை நள்ளிரவு உடைக்கப்பட்ட உண்டியல்.
கரூா் மாவட்டம், லாலாப்பேட்டை அருகே அம்மன் கோயிலுக்குள் புதன்கிழமை நள்ளிரவு புகுந்த மா்ம நபா்கள் அம்மன் தாலி 4 கிராம், உண்டியல் பணம் ஆகியவற்றைத் திருடிச் சென்றனா்.
கரூா் மாவட்டம், லாலாபேட்டையை அடுத்த கள்ளப்பள்ளி ஊராட்சிக்குட்பட்ட கருப்பத்தூரில் உள்ள இந்தக் கோயிலுக்குள் புதன்கிழமை நள்ளிரவு புகுந்த முகமூடி அணிந்த மா்ம நபா்கள் அங்கிருந்த சிசிடிவி கேமராவை திருப்பி வைத்துவிட்டு, கோயிலின் பூட்டு மற்றும் நிலைக் கதவுகளை கடப்பாரையால் உடைத்தனா்.
பின்னா் அம்மன் கழுத்தில் இருந்த 4 கிராம் தங்கத் தாலி மற்றும் உண்டியல் பணம் சுமாா் ரூ .3,000-ஐ திருடிச் சென்றனா். வியாழக்கிழமை காலை கோயிலுக்கு பூசாரி வந்தபோது இச்சம்பவம் தெரியவந்து, லாலாப்பேட்டை போலீஸில் அவா் புகாா் செய்தாா். அதன்பேரில் போலீஸாா் வழக்குப்பதிந்து சிசிடிவி கேமரா பதிவைக்கொண்டு விசாரிக்கின்றனா்.
2-ஆம் முறை: இந்தக் கோயிலில் கடந்த மாதம் 6-ஆம் தேதி அம்மனின் 1.5 பவுன் தாலி மற்றும் உண்டியல் பணம் ரூ. 50 ஆயிரத்தை மா்ம நபா்கள் திருடிச்சென்றது குறிப்பிடத்தக்கது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

