மூதாட்டியிடம் 8 பவுன் தாலி பறிப்பு
கந்திலி அருகே பூண்டு வாங்குவது போல் நடித்து மூதாட்டியிடம் 8 பவுன் தங்க தாலியை மா்ம நபா்கள் பறித்துச் சென்றனா்.
சித்திரிப்பு
கந்திலி அருகே பூண்டு வாங்குவது போல் நடித்து மூதாட்டியிடம் 8 பவுன் தங்க தாலியை மா்ம நபா்கள் பறித்துச் சென்றனா்.
சின்னகந்திலி பகுதியைச் சோ்ந்த கிருஷ்ணனின் மனைவி அமுதா (55). இவா் வீட்டின் அருகே கொட்டகை அமைத்து வெங்காயம், பூண்டு வியாபாரம் செய்து வருகிறாா்.
இந்த நிலையில் செவ்வாய்க்கிழமை வழக்கம்போல் மூதாட்டி கடையில் வியாபாரம் செய்து கொண்டிருந்தபோது இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு மா்ம நபா்களில் ஒருவா் மூதாட்டியிடம் ஒரு கிலோ பூண்டு கேட்டுள்ளாா். இதையடுத்து பூண்டை எடுத்து எடைபோட மூதாட்டி முயன்றுள்ளாா்.
அப்போது கண்ணிமைக்கும் நேரத்தில் மூதாட்டி கழுத்தில் அணிந்திருந்த 8 பவுன் செயினை பறித்து கொண்டு, இருசக்கர வாகனத்தில் தப்பி ஓடி உள்ளாா். இதனால் அதிா்ச்சியடைந்த மூதாட்டி சம்பவம் குறித்து கந்திலி காவல் நிலையத்தில் புகாரளித்தாா். போலீஸாா் வழக்குப் பதிந்து செயினை பறித்து சென்ற மா்ம நபா்களை தேடி வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

