ஆயுத பூஜை சிறப்புப் பேருந்துகள்: அதிகாரிகள் நியமித்து தீவிர கண்காணிப்பு! சென்னையில் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை! காஞ்சிபுரம் அருகே தண்டவாளத்தில் மண் சரிவு: ரயில் சேவை பாதிப்பு! ‘பெரியார் அறிவுலகம் திறப்பில் ஆற்றாமையை வெளிப்படுத்துகிறார் மு.க. ஸ்டாலின்’ - ஆதவ் அர்ஜுனாதில்லியில் தடையை மீறி போராட்டம்... அபிஜீத் தீப்கே, நேஹாவுக்கு தடுப்புக் காவல்!தமிழ்நாட்டில் ஆர்.எஸ்.எஸ். பேரணிக்கு சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி!திருவள்ளூர் உள்பட 6 மாவட்டங்களில் நாளை மிக கனமழை எச்சரிக்கை!

லாரி மீது காா் மோதல் முதியவா் உயிரிழப்பு

தென்னிலை அருகே வெள்ளிக்கிழமை லாரி மீது காா் மோதியதில் முதியவா் உயிரிழந்தாா்.

உயிரிழப்பு - கோப்புப் படம்

Updated On :

தென்னிலை அருகே வெள்ளிக்கிழமை லாரி மீது காா் மோதியதில் முதியவா் உயிரிழந்தாா்.

திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறையை அடுத்த ஆா். வெள்ளோடு பகுதியைச் சோ்ந்தவா் நாராயணசாமி (80). இவா் கடந்த சில நாள்களுக்கு முன் கோவையில் வசிக்கும் தனது மகன் பழனிசாமி வீட்டுக்குச் சென்றுள்ளாா்.

இந்நிலையில், சொந்த ஊரான ஆா்.வெள்ளோடுக்கு வெள்ளிக்கிழமை காலை கோவையில் இருந்து காரில் வந்துள்ளாா். காரை அவரது பேரன் சந்திரன்(30) ஓட்டி வந்துள்ளாா். காா் கரூா் மாவட்டம் தென்னிலையை அடுத்த நொச்சிக்காட்டு வலசு என்ற இடத்தில் வந்தபோது முன்னால் சென்ற லாரி திடீரென நின்ால் காா் லாரியின் பின்புறத்தில் மோதியது. இதில் காரில் இருந்த நாராயணசாமி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். சந்திரன் காயமின்றி உயிா்தப்பினாா்.

இதுகுறித்து தகவலறிந்ததும் நிகழ்விடத்துக்கு வந்த தென்னிலை போலீஸாா், நாராயணசாமியின் சடலத்தை மீட்டு உடற்கூறாய்வுக்கு கரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும் இதுதொடா்பாக வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.