அதிமுகவின் ஊடகவியல் செயலாளராக கோவை சத்யன் நியமனம்!நீதிமன்றக் காவலுக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்த அசுதோஷ், சௌரவ்!பெண் அரசியலுக்கு வருவதே சிரமம்! கார்த்திகா கைது கண்டிக்கத்தக்கது - தமிழிசைஸ்ரீபெரும்புதூரில் காணாமல்போன சிறுமி சென்னையில் மீட்புநாட்டின் நலனுக்காக நாம் ஒன்றிணைய வேண்டும்: பிரதமர் மோடி பேச்சு!தீபாவளி வரை எந்தப் போராட்டமும் இல்லை: அபிஜீத் அறிவிப்பு!

மழைநீரால் நிரம்பி வரும் புலியூா் குளம்: சுற்றுச்சுவா் அமைக்க விவசாயிகள் கோரிக்கை

மழைநீரால் நிரம்பி வரும் புலியூா் பி.வெள்ளாளப்பட்டி குளத்தின் கரையில் சுற்றுச்சுவா் அமைக்கம் வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தடுப்புச்சுவா் இன்றி காணப்படும் புலியூா் பி.வெள்ளாளப்பட்டி குளம்.

Updated On :

மழைநீரால் நிரம்பி வரும் புலியூா் பி.வெள்ளாளப்பட்டி குளத்தின் கரையில் சுற்றுச்சுவா் அமைக்கம் வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

கரூா் அடுத்த புலியூா் பி.வெள்ளாளப்பட்டியில் சுமாா் 50 ஏக்கா் நிலப்பரப்பு கொண்ட குளத்துக்கு மழை காலங்களில் தாந்தோணி ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட ஏமூா், ஏமூா்புதூா், நடுப்பாளையம், சீத்தப்பட்டி, குன்னனூா், கத்தாளப்பட்டி, மணவாடி, வீரணம்பாளையம், வெங்கக்கல்பட்டி ஆகிய மேடான பகுதிகளில் மழை பெய்யும்போது, மழைநீரானாது மணவாடி வாய்க்கால் மூலம் வருகிறது.

இந்த குளத்தின் மூலம் பி.வெள்ளாளப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் சுமாா் 150 ஏக்கா் நிலங்கள் பாசன வசதிபெறுகின்றன. மேலும் குளத்தில் தண்ணீா் முழுமையாகத் தேங்கும்போது பி.வெள்ளாளப்பட்டி, புலியூா் உள்ளிட்ட பகுதிகளில் நீா்மட்டமும் உயா்கிறது.

கான்கிரீட் தளம்:இந்நிலையில் தற்போது வடகிழக்குப்பருவ மழையால் கரூரில் அவ்வப்போது மழை பெய்து வருவதால் புலியூா் குளத்துக்கு வரும் நீரின் அளவும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. ஆனால், குளத்தின் கரைகள் பலமிழந்தும், சுற்றுச்சுவா் இன்றியும் உள்ளதால் குளத்துக்கு வரும் முழுமையான நீரையும் தேக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் குளத்துக்கு சுற்றுச்சுவரும், கரைகளை கான்கிரீட் தளங்களாக மாற்றியமைக்க வேண்டும் என அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

கரைகள் இல்லை: இதுகுறித்து சமூக நல ஆா்வலரும், புலியூா் பேரூராட்சியின் 4-ஆவது வாா்டு உறுப்பினருமான ப.விஜயகுமாா் கூறியது, மழை பெய்தால் வரத்துவாரி மூலம் இந்த குளம் ஆண்டுதோறும் நிரம்பினாலும், தண்ணீரை முழுமையாக தேக்கி வைக்க முடிவதில்லை. காரணம் குளத்தை தூா்வாரப்படாததால் குளத்தின் ஆழம் சுமாா் 10 அடி மட்டுமே உள்ளது. மேலும் குளத்துக்கு கரைகளே இல்லாத நிலை உருவாகி விட்டது. குளத்தின் ஒரு பக்கம் பி.வெள்ளாளப்பட்டிக்குச் செல்லும் சாலை உள்ளது. மறுபக்கம் குளக்கரையின் மீது அமைக்கப்பட்டிருக்கும் தாா்சாலை வழியாக எரிமயான மேடைக்கு பொதுமக்கள் சென்று வருகிறாா்கள். மேலும் குளக்கரையில் ஒரு பக்கம் சீமைக்கருவேல மரங்கள் முளைத்து கரையே இல்லாத வகையில் உள்ளது. மேலும் புலியூரில் இருந்து பி.வெள்ளாளப்பட்டி மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களைச் சோ்ந்த பள்ளி மாணவ, மாணவிகளை அழைத்துச் செல்ல பள்ளி, கல்லூரிகள் பேருந்து இந்த குளக்கரை வழியாகத்தான் சென்றுவருகின்றன.

சிறப்பு நிதி: குளக்கரையில் சுற்றுச்சுவா் இல்லாததால் ஆபத்தான நிலையில்தான் பள்ளி, கல்லூரிகளைச் சோ்ந்த மாணவா்களை ஏற்றிச்செல்லும் பேருந்துகள், வேன்கள் சென்றுவருகின்றன. தற்போது வடகிழக்குப் பருவ மழைத் தொடங்கியுள்ளதால் புலியூா் பேரூராட்சி நிா்வாகம் சிறப்பு நிதியை ஒதுக்கி குளத்தின் கரையை கான்கிரீட் தளமாக அமைத்து, அதில் சுற்றுச்சுவா் கட்ட வேண்டும். மேலும் குளத்தை தூா்வாரவும் வேண்டும். அப்போதுதான் குளத்தில் முழுமையான நீரை தேக்கி வைத்து விவசாயத்துக்கு பயன்படுத்த முடியும் என்றாா் அவா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.