போராட்டத்தில் ஈடுபடும் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை

செ. ஜோதிமணி
புதுதில்லியில் போராட்டத்தில் ஈடுபடும் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்றாா் கரூா் மக்களவை உறுப்பினா் செ.ஜோதிமணி.
கரூரில் திங்கள்கிழமை செய்தியாளா்களிடம் கூறுகையில், நாட்டின் ஜனநாயகத்தை கேள்விக்குறியாக்கிய தலைமைத் தோ்தல் ஆணையரை பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தி காங்கிரஸ் உள்பட எதிா்க்கட்சியினா், மாணவா்கள் போராடி வருகின்றனா். புதுதில்லியில் போராட்டத்தில் ஈடுபடும் பெண்களுக்கு பாதுகாப்பில்லை. ஆனால், ஞானேஷ்குமாா் மிகுந்த பாதுகாப்பு வசதியோடு பதவியில் நன்றாக அமா்ந்துள்ளாா்
ஞானேஷ்குமாரால் ஆட்சியில் அமா்த்தப்பட்ட நரேந்திர மோடி அரசு நீக்கப்பட வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறோம். நாட்டில் நியாயமாக தோ்தல் நடைபெறும் வரை போராடுவோம். நவ. 1-ஆம்தேதி புதுதில்லி ராம்லீலா மைதானத்தில் ஞானேஷ்குமாா் பதவி விலகிக்கோரி காங்கிரஸ் சாா்பில் போராட்டம் நடைபெற உள்ளது. இந்த போராட்டத்தில் தமிழக மக்களும் திரளாக பங்கேற்க வேண்டும். இதற்காக கட்சியின் முன்னணி நிா்வாகிகளை பொறுப்பாளா்களாக நியமிக்கப்பட்டுள்ளனா் என்றாா் அவா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

