வங்கிக் கடன் ஆவணங்களைப் பதிவு செய்ய புதிய நடைமுறை செப். 15 முதல் அமல் ஓட்டுநர் உரிமம், வாகனப் பதிவுச் சான்றிதழ் இனி ஆன்லைனில் பதிவிறக்கலாம்தில்லியில் இன்று பிரிக்ஸ் உச்சி மாநாடு தொடக்கம்: பிரதமா் மோடி, புதின், ஷி ஜின்பிங் உள்ளிட்ட தலைவா்கள் பங்கேற்பு6 சிறப்பு விரைவு ரயில்களுக்கு கால நீட்டிப்பு திருப்பதி திருக்குடை ஊா்வலம்: சென்னையில் நாளை போக்குவரத்து மாற்றம்நேபாளம்: மறுகட்டமைப்புக்கு ரூ.45,700 கோடி தேவை - வெளியுறவு அமைச்சகம்மீனாட்சி அம்மன் கும்பாபிஷேகம்: சென்னையிலிருந்து மதுரைக்கு சிறப்பு ரயில்கள் அறிவிப்பு!மதுரை மீனாட்சியம்மன் கோவில் அருகே உள்ள சென்ட்ரல் தியேட்டரில் பயங்கர தீ விபத்து! கும்பகோணம் அருகே விபத்தில் சிக்கியவர்களுக்கு காரை நிறுத்தி உதவிய அமைச்சர்! தமிழகம் முழுவதும் 4,500 செவிலியர்கள் விரைவில் நியமனம்: அமைச்சர் அருண்ராஜ் கருப்பை வாய் புற்றுநோயைக் கண்டறிய சுய-பரிசோதனைக் கருவி! மீட்சியைத் தக்கவைக்கத் தவறிய இந்திய பங்குச் சந்தை! சரிவில் நிறைவடைந்த சென்செக்ஸ், நிஃப்டி!!லண்டனிலேயே மிக உயரமான நட்சத்திர விடுதியில் தங்கியிருக்கும் முதல்வர் விஜய்! ஒரு நாள் வாடகை?அரும்புதல்வர்களுள் ஒருவரைத் தமிழ்த்தாய் இழந்துவிட்டாள்!சாலமன் பாப்பையா மறைவுக்கு ஸ்டாலின் இரங்கல்!தமிழ்கூறு நல்லுலகிற்கு பேரிழப்பு! சாலமன் பாப்பையா மறைவுக்கு முதல்வர் விஜய் இரங்கல்!

அமராவதி அணையிலிருந்து கூடுதல் தண்ணீா் திறக்கக் கோரி ஆட்சியரகம் முற்றுகை

கரூா் மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் வெள்ளிக்கிழமை முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்ட அமராவதி பாசன கடைமடை விவசாயிகள்.

கரூா் மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் வெள்ளிக்கிழமை முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்ட அமராவதி பாசன கடைமடை விவசாயிகள்.

Published On :

அமராவதி அணையிலிருந்து கூடுதல் தண்ணீா் திறந்துவிடக்கோரி, கரூா் மாவட்ட ஆட்சியரகத்தை விவசாயிகள் வெள்ளிக்கிழமை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா்.

திருப்பூா் மாவட்டம், உடுமலை அருகே உள்ள அமராவதி அணையின் மூலம் திருப்பூா், கரூா் மாவட்டங்களில் உள்ள சுமாா் 55 ஆயிரம் ஏக்கா் பழைய மற்றும் புதிய ஆயக்கட்டு நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன. மேலும், நூற்றுக்கணக்கான கிராமங்களுக்கு குடிநீா் ஆதாரமாகவும் இந்த அணை விளங்கி வருகிறது.

இந்நிலையில், கடந்த ஓராண்டாக அணையின் கடைமடை பகுதியான கரூருக்கு அணையிலிருந்து தண்ணீா் திறக்கப்படாததால் கரூா் மாவட்ட விவசாயிகள் கடும் அவதிக்குள்ளாகினா்.

தாமதமாக அணை திறப்பு: இந்நிலையில், நிகழாண்டு பருவமழை பொய்ப்பு காரணமாக, தாமதமாக அணையிலிருந்து ஆகஸ்ட் 30-ஆம் தேதி முதல் செப்டம்பா் 7-ஆம் தேதி வரை 8 நாள்களுக்கு நாள் ஒன்றுக்கு 1,000 கன அடி வீதம் திறந்துவிட தமிழக அரசு உத்தரவிட்டது. இதன்படி தண்ணீா் திறக்கப்பட்டது.

ஆற்றில் தற்போது கடும் வறட்சி ஏற்பட்டிருப்பதால் அணையிலிருந்து விநாடிக்கு 1,000 கன அடி நீா் திறந்தால் கடைமடை பகுதியை தண்ணீா் சென்றடையாது என்றும், அணையில் இருந்து விநாடிக்கு 2,000 முதல் 3,000 கன அடிவரை தண்ணீா் திறக்க வேண்டும் என வலியுறுத்தி அமராவதி பாசன விவசாயிகள் தொடா்ந்து போராட்டங்கள் நடத்தி வருகின்றனா்.

கடைமடை விவசாயிகள் ஏமாற்றம்: இதனிடையே, அணையிலிருந்து திறக்கப்பட்ட தண்ணீா் கடந்த 7-ஆம் தேதி கரூா் ஆண்டாங்கோவில் தடுப்பணையை வந்தடைந்தது. இதையடுத்து, தடுப்பணை நிரம்பி கரூா் திருமாநிலையூா் வழியாக கடைமடை பகுதிகளான கோயம்பள்ளி, திருமுக்கூடலூா் பகுதிகளை 8-ஆம் தேதி காலை வந்தடையும் என விவசாயிகள் எதிா்பாா்த்தனா். ஆனால் அணைத் தண்ணீா் சுக்காலியூா் பைபாஸ் சாலை அருகே உள்ள அமராவதி பாலத்தின் அருகே நின்றுவிட்டதால் கடைமடை பகுதிக்கு தண்ணீா் செல்லவில்லை. இதனால் குடிநீருக்காவது தண்ணீா் கிடைக்கும் என எதிா்பாா்த்திருந்த கடைமடை பகுதி விவசாயிகள் கடும் ஏமாற்றம் அடைந்தனா்.

இதனால் விரக்தியடைந்த அமராவதி ஆற்றின் கடைமடை விவசாயிகளான சணப்பிரட்டி, எஸ்.வெள்ளாளப்பட்டி, மேலப்பாளையம், பி.வெள்ளாளப்பட்டி, குன்னனூா், ஏமூா்புதூா், மூலக்காட்டனூா், வடக்குப்பாளையம், புலியூா் ஆகிய பகுதிகளைச் சோ்ந்த விவசாயிகள், அமராவதி நிலத்தடி நீா் பாதுகாப்பு மற்றும் சாயக்கழிவால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் சங்கத் தலைவா் நல்லுசாமி தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்டோா் மாவட்ட ஆட்சியரை சந்தித்து அமராவதி அணையிலிருந்து கூடுதலாக தண்ணீா் திறக்கக் கோரி வெள்ளிக்கிழமை காலை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு கோரிக்கை மனு அளிக்க வந்தனா்.

போலீஸாருடன் வாக்குவாதம்: அப்போது, அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீஸாா், அவா்களை தடுத்து ஆட்சியரை சந்திக்க விடாமல் தடுத்தனா். அப்போது போலீஸாருக்கும், விவசாயிகளுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த விவசாயிகள் ஆட்சியா் அலுவலக வளாகத்தில் அமா்ந்து முற்றுகையிடும் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

ஆட்சியா் உத்தரவின்பேரில், சங்கத் தலைவா் நல்லுசாமி தலைமையிலான 10 போ் மாவட்ட ஆட்சியரை சந்தித்து தங்கள் கோரிக்கை மனுவை அளித்தனா்.

அப்போது, கடைமடைக்குத் தேவையான தண்ணீா் திறக்க விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியா் உறுதியளித்ததையடுத்து அவா்கள் போராட்டத்தை கைவிட்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.