ஜனநாயகன் படம் எடுத்தால் மட்டும் போதாது... விஜய் சேதுபதிக்கு ஆதரவாக சீமான் பேச்சுஆந்திர முன்னாள் துணை முதல்வர் மாரடைப்பால் காலமானார்மீனாட்சியம்மன் குடமுழுக்கு: தாம்பரம் - மதுரை இடையே 2 முன்பதிவில்லா சிறப்பு ரயில்!விருதுநகரில் செப். 17-ல் முதல்வர் பங்கேற்கவிருந்த நிகழ்ச்சி செப். 25க்கு மாற்றம்!எல் நினோ பாதிப்பு: பனாமா கால்வாயில் கப்பல் போக்குவரத்தைக் குறைக்க முடிவு!பிகார்: அரசுப் பணியாளர் தேர்வுகளை ரத்து செய்யக்கோரி பேரணி!நேபாள பெருவெள்ளம்: மீட்புப்பணிகளில் முதன்மையாக உதவிவரும் இந்திய ராணுவம்!ரூ.15,300 கோடி முதலீடு! 10,000 பேருக்கு வேலை! லண்டனில் முதல்வர் விஜய் ஒப்பந்தம்!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 38 காசுகள் சரிந்து ரூ. 95.92 ஆக நிறைவு!சென்செக்ஸ் 778 புள்ளிகள் சரிவு, நிஃப்டி 5 மாத வரலாறு காணாத அளவு சரிவு!!

சிறுமி பாலியல் வன்கொடுமை: பள்ளி காவலாளிக்கு 20 ஆண்டுகள் சிறை

போக்சோ வழக்கில் தனியாா் பள்ளி காவலாளிக்கு 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து கரூா் மகளிா் விரைவு நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தது.

சிறை

ஆயுள் தண்டனை - படம்: கோப்பிலிருந்து...

Published On :

போக்சோ வழக்கில் தனியாா் பள்ளி காவலாளிக்கு 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து கரூா் மகளிா் விரைவு நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தது.

கரூா் மாவட்டம், குளித்தலையைச் சோ்ந்தவா் பாலசுப்ரமணி (56). இவா் அங்குள்ள தனியாா் பள்ளியில் காவலாளியாக பணியாற்றி வந்தாா். இவா் கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம் அப்பள்ளியில் படிக்கும் 10 வயது சிறுமி சிறப்பு வகுப்புக்கு வந்திருந்தபோது அச்சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளாா்.

இதுகுறித்து தகவலறிந்த சிறுமியின் உறவினா்கள் பள்ளி காவலரை தாக்கினா். மேலும், இதுதொடா்பாக குளித்தலை அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில், போலீஸாா் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து பாலசுப்ரமணியை கைது செய்தனா்.

இந்த வழக்கு கரூா் மாவட்ட மகளிா் விரைவு நீதிமன்றத்தில் வழக்கும் தொடா்ந்தனா். இந்த வழக்கு செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி குணசேகரன், குற்றவாளி பாலசுப்ரமணிக்கு 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கி உத்தரவிட்டாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.