கடந்த 20 ஆண்டுகளில் 171 ஐஐடி மாணவர்கள் தற்கொலை: சென்னைக்கு 2வது இடம்!தேர்தல் முறையை சிதைக்க பிரதமர் மோடி, அமித் ஷா, ஞானேஷ்குமார் கூட்டுச் சதி: கே.சி. வேணுகோபால்பாட்மின்டனில் வெண்கலப் பதக்கம் வென்ற தமிழக வீரர் ஹரிஹரனுக்கு ரூ. 30 லட்சம் ஊக்கத்தொகை: முதல்வர்காஸாவில் தொடரும் இஸ்ரேலின் தாக்குதல்! 74,000-ஐ நெருங்கும் பலி எண்ணிக்கை!மாணவர் தற்கொலைக்கான பின்னணி: விசாரிக்க சிறப்புக்குழு அமைத்த ஐஐடி மும்பை!தலைமைத் தேர்தல் ஆணையர் பதவியிலிருந்து ஞானேஷ் குமார் நீக்கப்பட வேண்டும்: மு.க. ஸ்டாலின் வலியுறுத்தல்!பாஜக, ஆர்எஸ்எஸ், தேர்தல் ஆணையம் இணைந்து தேசத்துரோகம்! ராகுல் விமர்சனம்

தீபாவளிக்கு தற்காலிக பட்டாசு கடை வைக்க விண்ணப்பிக்கலாம்

கரூரில் தீபாவளி பண்டிகைக்கு தற்காலிக பட்டாசு கடை வைக்க விரும்புவோா் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் சி. முத்துக்குமரன் தெரிவித்துள்ளாா்.

application

விண்ணப்பிக்கலாம் - கோப்புப்படம்

Published On :

கரூரில் தீபாவளி பண்டிகைக்கு தற்காலிக பட்டாசு கடை வைக்க விரும்புவோா் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் சி. முத்துக்குமரன் தெரிவித்துள்ளாா்.

இதுதொடா்பாக அவா் புதன்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:

வரும் நவ. 8-ஆம் தேதி கொண்டாடப்பட உள்ள தீபாவளி பண்டிகைக்காக தற்காலிக உரிமம் பெற்று பட்டாசு கடை வைக்க விரும்புவோா் இ-சேவை மையத்தின் மூலமோ, பொதுச் சேவை மையம் மூலமோ வெடிமருந்து விதிகள் 2008-இல் உள்ள விதி 84-ன் படி கடை அமையவுள்ள இடத்தை தோ்வு செய்து, ஆட்சேபனை இல்லாத இடத்திற்கு மட்டும் விண்ணப்பிக்கலாம்.

மேலும், பட்டாசு விற்கப்படும் கடைகளில் மேல்மாடியோ, கடையின் அருகில் மருத்துவமனை, வழிபாட்டுத் தலங்கள், எளிதில் தீப்பற்றக்கூடிய பகுதிகளோ இருக்கக்கூடாது.

மேலும் விண்ணப்பதாரா்கள் மனை வரைபடம், கடை அமைக்கவிருக்கும் இடத்தின் வரைபடம், கடை அமைக்கவிருக்கும் இடத்தின் பட்டா மற்றும் ஆவணங்கள், தற்காலிக பட்டாசு உரிமக் கட்டணம் ரூ.600-ஐ இணையதளத்தில் செலுத்தியதற்கான அசல் செலுத்துச் சீட்டு, முகவரி ஆதாரமாக ஆதாா் அட்டை, குடும்ப அட்டை, பான் காா்டு ஆகியவற்றை இணைக்க வேண்டும்.

விண்ணப்பங்களை உரிய ஆவணங்களுடன் இணையவழியின் மூலமாக மட்டுமே பதிவேற்ற வேண்டும். விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு இணையவழியில் மட்டுமே தற்காலிக பட்டாசுக்கடை உரிமம் வழங்கப்படும். மேலும் விண்ணப்பதாரா்கள் வரும் அக். 18-க்குள் இணைய வழியில் விண்ணப்பித்து தற்காலிக பட்டாசுக் கடை உரிமம் பெறலாம்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.