ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

தொழிற்பயிற்சி மாணவியர் விடுதி திறப்பு

பெரம்பலூர் அருகேயுள்ள கீழக்கனவாய் கிராமத்தில், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் நல தொழிற்பயிற்சி மாணவியர் விடுதி திறப்பு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :5 ஜனவரி 2013, 3:57 am

தினமணி

பெரம்பலூர் அருகேயுள்ள கீழக்கனவாய் கிராமத்தில், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் நல தொழிற்பயிற்சி மாணவியர் விடுதி திறப்பு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
 விடுதியை திறந்து வைத்து, பெரம்பலூர் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் இரா. தமிழ்ச்செல்வன் பேசியது: தமிழக முதல்வர் மாணவ, மாணவிகளுக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். குறிப்பாக ஊக்கத்தொகை, விலையில்லா மடிக்கணினி, சைக்கிள் உள்ளிட்ட நலத் திட்டங்கள் மாணவர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. தற்போது திறக்கப்பட்டுள்ள மிகவும் பிற்படுத்தப்பட்டோர் நல விடுதி 100 தொழிற் பயிற்சி மாணவிகள் தங்கும் வகையில் திறக்கப்பட்டுள்ளது. வாடகை கட்டடத்தில் தொடங்கப்பட்ட இந்த விடுதிக்கு, விரைவில் புதிய கட்டடம் கட்டுவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படும் என்றார்.
 இந்நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் எம்.ஏ. சுப்பிரமணியன், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் (பொறுப்பு) தெய்வசிகாமணி, மாவட்ட ஊராட்சி துணைத் தலைவர் என். சேகர், ஒன்றியக் குழுத் தலைவர் ஆர்.பி. மருதைராஜ், மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினர் இரா. வடிவேலு, பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர் பாண்டியன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.