"நமக்கு நாமே' பயணத்திட்ட தெருமுனை பிரசாரக் கூட்டம்
பெரம்பலூரில் நகர திமுக இளைஞரணி சார்பில் வியாழக்கிழமை துறைமங்கலத்தில் தொடங்கிய தெருமுனைப் பிரசாரக் கூட்டத்துக்கு நகரச் செயலர் எம். பிரபாகரன் தலைமை வகித்தார்.
பெரம்பலூரில் நகர திமுக இளைஞரணி சார்பில் வியாழக்கிழமை துறைமங்கலத்தில் தொடங்கிய தெருமுனைப் பிரசாரக் கூட்டத்துக்கு நகரச் செயலர் எம். பிரபாகரன் தலைமை வகித்தார். கட்சிப் பேச்சாளர் கவிஞர் நன்மாறன்,பெரம்பலூர் மாவட்டச் செயலர் சி. ராஜேந்திரன் ஆகியோர் "நமக்கு நாமே' பயணத் திட்டத்தை விளக்கிப் பேசினர். தொடர்ந்து, சங்குப்பேட்டை,வடக்கு மாதவி சாலை, பழைய பேருந்து நிலையம், அரணாரை ஆகிய இடங்களிலும் தெருமுனை பிரசாரக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில், தலைமை செயற்குழு உறுப்பினர் என். ராஜேந்திரன், மாவட்ட அவைத் தலைவர் அ. நடராஜன், ஒன்றியச் செயலர் எஸ். அண்ணா துரை உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

